சட்டையைப் பிடிப்பதும் சல்யூட் அடிப்பதும் சரியா?
பி
ப்ரவரி - 1 அன்று வெளியான ‘சமத்துவம் ஏன் அவசியமாகிறது?’என்கிற கட்டுரை படித்தேன். ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்பதெல்லாம் பொருளாதார அந்தஸ்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதைப் போல உச்சாணிக் கொம்பின் உயரத்தில் சிலரும், அதல பாதாளத்தில் பலரும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்வு எதனால்? சிலருக்குக் கிடைக்கும் சந்தர்ப்பமும் வாய்ப்பும் பலருக்கு எட்டாக்கனியாக உள்ளதற்குச் சமூகக் கட்டமைப்பில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்யாமல், சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாதல்லவா? சட்டங்கள் சாமானியர்களின் சட்டையைப் பிடிப்பதும், அதே சட்டம் பணக்காரர்களுக்கு சல்யூட் அடிப்பதுமாக மாறுவது எதனால் என்பதைச் சிந்திக்க வைக்கிறது கட்டுரை. உயிர்த் தொழிலாம் உழவுப் பணிக்கு உதவியாக டிராக்டர் வாங்க லட்சங்களில் கடன் வாங்கிய விவசாயியைக் காவல்துறை உதவிகொண்டு அராஜகம் செய்த கடந்தகால நிகழ்வும், கோடிக்கணக்கில் கடன் வாங்கிய விஜய்மல்லையாவுக்கு அரசு அளித்த சலுகைகளும் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? இது அரசின் ஒரு தலைப்பட்சமான கொடுங்கோன்மை அல்லவா? அனைவரும் சமமான சகவாழ்வு வாழ உறுதிசெய்வதே சமத்துவத்தின் ஒப்பற்ற பணியாகும். நாட்டில் சமத்துவம் நிலவினால் பல்வேறு பிரச்சினைகள் எழாது அல்லவா?
- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
புத்தகக் காட்சிகள் அறிவுலகின் வெற்றி
கோ
.ஒளிவண்ணன் எழுதியுள்ள ‘புத்தகக் காட்சியை நிர்ணயிப்பது எது? (27.1.18) எனும் கேள்விக்கு நிறைய விற்பனை என்பதை விட, தரமான புத்தகங்களின் விற்பனையும், நல்ல வாசகர்களின் வருகையும் எனச் சொல்லலாம். ஓரளவுக்கு இந்த நோக்கம் நிறைவேறியிருந்தாலும், புத்தகக் காட்சிகளில் நடக்கும் பொது மேடைகள் படைப்புகளை விமர்சிக்கும் அரங்குகளாக மாற வேண்டும். வருடந்தோறும் புதிய எழுத்தாளர்களை அழைத்து அங்கீகாரம் கொடுக்கும் அரங்குகளாக அவை மாற வேண்டும். கோ.ஒளிவண்ணன் சொல்வதுபோல ‘முகநூல், வலைதளம் போன்றவற்றில் எழுதத் தொடங்குபவர்கள், குறுகிய காலத்தில் தேர்ந்த எழுத்தாளர்களாகிவிடுகின்றனர்’ என்பது உண்மைதான். இருந்தாலும் பெண்களுக்கு, புதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் பதிப்பகங்கள் கிடைப்பது எளிதாக இல்லை. சில பதிப்பகங்கள், தங்கள் கருத்துக்குத் தக்கவாறு எழுதுபவர்களை மட்டுமே தூக்கிவிடுவதும், பயிற்சி அளிப்பதுமாக உள்ளன. பதிப்பக அரசியலை அறியாத புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் புத்தகக் காட்சிகள் அமைதல் வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதும் நடக்கும் புத்தகக் காட்சிகள் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கின்றன. பெருந்திரளாகப் புத்தகங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் பெரும் பணியைப் புத்தகக் காட்சிகள் செய்கின்றன. மதுரையில் நடக்கும் ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் வாசகர்கள் முதன்முதலில் மதுரையில் இதனை ஆரம்பித்து வைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரனை நினைவுகூர்கின்றனர். பார்வையாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், அதிகாரிகள் எனப் பெரும் ஒருங்கிணைப்பில் நடைபெறும் புத்தகக் காட்சிகள் வளர்வது அறிவுலகின் வெற்றியாகும்.
- வா.நேரு, மதுரை.
சமுதாய நற்பணி
பி
ரபஞ்சனின் ‘எமதுள்ளம் சுடர்விடுக’கட்டுரை (31.01.18) சுதந்திரப் போராட்ட வீரர் மெளலானா அபுல்கலாம் ஆஸாத்தை தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நினைவூட்டியது. இன்பமாக வாழ வேண்டிய இளம் வயதில் பல முறை சிறைக்குச் சென்ற அபுல்கலாம், தனது 35-வது வயதில், பிரிந்து நின்ற பெரும் தேசியத் தலைவர்களை ஒன்றிணைத்து, நாட்டின் விடுதலைப் போராட்டம் விரைவுபெறப் பணியாற்றினார். சிலர் மக்களுக்கிடையே மனமாச்சரியங்களை உருவாக்கி, வகுப்பு ஒற்றுமையைச் சீர்குலைத்து, பதவிபெற நினைக்கும் இந்தக் காலகட்டத்தில், பிரபஞ்சனின் இந்த நினைவூட்டல் சமுதாயத்துக்கான ஒரு நற்பணியாகும்.
- அபுல்ஹசன் கலாமி, காயல்பட்டணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago