இப்படிக்கு இவர்கள்: சிக்கல்களை அறிந்தால்தானே தீர்வு காண முடியும்?

By செய்திப்பிரிவு

சிக்கல்களை அறிந்தால்தானே தீர்வு காண முடியும்?

ன.14-ல் வெளியான உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துருவின் ‘சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தரணிகளாக இருக்கலாமா?’ கட்டுரை படித்தேன். எனது அனுபவத்தின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் பணிபுரிவது மக்கள் நலனுக்கு உகந்தது என்று கருதுகிறேன். வாராக்கடன் வழக்குகளைக் கையாளுவதால், வங்கிக்கு உள்ள சிரமம், வாடிக்கையாளர்களுக்கு உள்ள சிரமம், வங்கி அலுவலர் எப்படி சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை, வாடிக்கையாளர் எப்படிக் கடனை தவறாகப் பயன்படுத்துகிறார் போன்றவை எனக்குத் தெரியவருகிறது. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், வாராக்கடனால் வங்கித் துறை எவ்வளவு பாதிக்கப்படுகிறது, இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற அரசு எவ்வாறு நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான், விவசாயக் கடன்களும் கல்விக் கடன்களும் தற்போது நடைமுறையில் இருக்கும் வாராக்கடன் நெறிமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த முடிகிறது. திருநெல்வேலியில் கல்விக் கடனைக் கட்ட முடியாத பொறியியல் பட்டதாரி தற்கொலை செய்துகொண்டதையும், அரசு வங்கிகளின் வாராக்கடனைத் தனியார் வங்கிகளுக்கு விற்றதுதான் அதற்குக் காரணம் என்பதையும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசுவதற்கு, எனது வழக்கறிஞர் அனுபவம்தான் வழிகாட்டியாக இருக்கிறது. மேலும், இயற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களையும் தீர்ப்புகளையும் எல்லாத் தரப்பினரும் தெரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு சட்டமும், அதன் தீர்ப்புகளும் சமுத்திரம் போன்று உள்ளன. இந்நிலையில், நல்ல வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலோடும் துணையோடும் மக்களுக்கான சட்டங்கள் இயற்றப்படுவதுதான் சரியானதாக இருக்க முடியும். எனவே வழக்கறிஞர்கள் மட்டுமன்றி மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், பொருளாதார நிபுணர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றக் கூடாது என்று அகில இந்திய பார் கவுன்சிலில் முறையிட்ட அஸ்வினி குமார் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்திடமும் அதைப் பொதுநல வழக்காக எடுத்துச் சென்றார். இந்த விஷயம் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று உச்ச நீதிமன்றம் சொன்னதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

-அ.நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர்.

விவசாயிகளைக் காப்போம்!

ன. 18 அன்று வெளியான ‘விவசாயிகளை அரசு கைவிடக் கூடாது’ தலையங்கம் மிகச் சிறப்பானது. மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகம் விளைவிக்க வேண்டும் எனக் கூறி அதிகம் விளைவிக்க அரசுகள் ஊக்கப்படுத்துகின்றன. ஆனால், அதை நிறைவேற்றி, அரசின் இருப்புக்கு சிக்கல் இல்லாமல் செய்த விவசாயிகள் நிலை பரிதாபமாக இருக்கிறது.

தொடர்ந்து கடன்தான் மிஞ்சும் என்கிற சூழலில், அதிகம் வருவாய் தரும் பயிரில் எல்லோரும் குவிவது இயல்பே. எப்பயிராக இருப்பினும் வருவாயின் அளவில் அதிகம் வேறுபாடு இருக்காது எனில் எல்லோரும் ஒரே பயிரில் விழத் தேவையிருக்காது. அரசிடம் உற்பத்தி செலவு விவரம் உள்ளது. பகுதிவாரியான விவரமும் உள்ளது. உற்பத்திச் செலவுக்குக் கீழே விலை வீழுமானால் நஷ்டமாகும் தொகையையும், வாழ்க்கைச் செலவுக்காகக் கூடுதல் தொகையையும் அரசு வழங்க முன்வர வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதில் உள்ள குளறுபடிகளைச் சீர்செய்ய வேண்டும். விவசாயிகள் விளைவிக்கும் அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவுதான், அதிகம் விளைவித்துத் தருவதற்கு உரிய பரிசாக இருக்கும்!

- இரா. செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.

நாணயமும் பிரச்சினையும்

னைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று இந்திய ரிசர்வ் வங்கி விளக்கமளித்திருக்கும் செய்தியை வாசித்தேன். 10 ரூபாய் நாணயங்கள் 14 வகைகளில் புழக்கத்தில் உள்ளதை இந்தச் செய்தியின் மூலம்தான் அறிந்தேன். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம். சென்னையைத் தவிர பிற இடங்களில் இந்த நாணயங்களை வாங்க வணிகர்களும் மக்களும் மறுக்கிறார்கள். ஒரே மாதிரியான 10 ரூபாய் நாணயம் வெளியிடுவதுதான் இதற்குத் தீர்வாக இருக்கும்!

-ஆர்.முருகேசன், அந்தியூர், ஈரோடு மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்