இப்படிக்கு இவர்கள்: வரலாறு மன்னிக்காது

By செய்திப்பிரிவு

ஆண்டு நிறைவையொட்டி தருணங்கள், தமிழகம் பேசியது, முகங்கள் ஆகிய தலைப்புகளில் ‘தி இந்து’ தொடர்ந்து மூன்று நாட்கள் வெளியிட்ட சிறப்புப் பக்கங்கள் 2017-ம் ஆண்டின் சுவடுகளை நெஞ்சில் நிறுத்திவிட்டன. முக்கியமாக, உலகத் தருணங்களில் (டிச. 30) ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளைப் பற்றிய படமும் குறிப்பும் கண்கலங்க வைத்துவிட்டன. கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். அன்பைப் போதித்த புத்தரைப் பின்பற்றும் மியான்மர் நாட்டினர், இப்படியொரு தவறைச் செய்திருக்கக்கூடாது. வரலாறு அவர்களை மன்னிக்காது.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை- 83.

அறிவியக்கம் வெல்லட்டும்!

மூன்றாவது ஆண்டாக ‘தி இந்து’ முன்னெடுத்துள்ள ‘புத்தகங்களோடு பிறக்கட்டும் புத்தாண்டு’ பற்றிய செய்தி (டிச.31) கண்டேன். புத்தாண்டு பிறக்கும் தினத்தில், புத்தகக் கடைகளில் வாசகர்களை ஒன்றுகூட வைக்கும் முயற்சிக்கு மென்மேலும் வெற்றிகள் குவியட்டும். தற்போது அரசு ஊழியர்கள் ஆப்பிள் எலுமிச்சை வழங்கி தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர். அவர்கள், பழங்களுக்குப் பதிலாகப் புத்தகங்களை வழங்கினால் ஆண்டின் முதல்நாளே அறிவுக்கு விருந்தளிப்பதாக அமையும்.

எஸ். பரமசிவம், மதுரை.

அறியாத தகவல்கள்

முன்னாள் நிதி அமைச்சர் காங்கிரஸ் கட்சிக்காரர் என்பதைத் தாண்டி, ப.சிதம்பரத்தைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. டிசம்.29 நடுப்பக்கத்தில் அவரைப் பற்றி நான் அறியாத பல செய்திகளையும் படிக்கையில் ஆச்சர்யத்துக்கு உள்ளானேன். இளைய தலைமுறை தமிழகத்தின் தலைவர்களை அறிய வேண்டிய அவசியத்தையும் புரிந்துகொண்டேன்.

-கௌதம பிரியா, சென்னை

கடமைத் துறப்பு

தமிழகம் முழுவதும் 4,000 அரசுப் பேருந்துகள் பயணிகள் பயன்பாட்டில் இருந்து குறைக்கப் பட்டுவிட்டன என்ற செய்தியைப் (டிச.29) படித்தேன். ஏற்கெனவே, மக்கள் தொகைக்குப் போதுமான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற நிலையில், தற்போது இருக்கும் பேருந்து சேவையினையும் குறைப்பது மக்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும். தமிழக மக்கள் தொலைதூரப் பயணங்களுக்குப் பெரும்பாலும் பேருந்து சேவையைத்தான் பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்துத் துறை வருமான இழப்புக்கான காரணங்களைப் பற்றி விரிவாக ஆராயாமல், பேருந்து சேவையினைக் குறைப்பது கடமைகளைத் தட்டிக்கழிக்கும் செயல்.

- எம். ஆர். லட்சுமிநாராயணன், நாமக்கல்

சீர்திருத்தத்தின் தேவை

மருத்துவர் வெ. ஜீவானந்தம் எழுதிய ‘மார்ட்டின் லூதர் எனும் மதச் சீர்திருத்தவாதி’ (டிச.28) கட்டுரை, மகான்களின் கருத்துக்கள் மதமாக மாறும்பொழுது, அதன் உண்மைத்தன்மை மாறி, அதை நேர்படுத்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு சீர்திருத்தவாதி அதை செம்மைப்படுத்த வேண்டி இருக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. மதமோ, கொள்கையோ, முதலில் பரவும் பொழுது மக்களின் அறியாமையில் மையம் கொள்கிறது, பிறகு சீர்திருத்தவாதிகளால் செழுமைப்படுத்தப்படுகிறது என்பதே வரலாறு சொல்லும் பாடம்.

-சத்தி, அம்பாசமுத்திரம்.

என்ன வகை அரசியல்?

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு, அரசியல் என் பது அரசுப்பதவி என்ற தவறான புரிதலையே காட்டுகிறது. அரசியல் என்பது மக்களுக்கு தொண்டாற்றுவது.காந்தி யும் பெரியாரும் இருந்தது அரசியலில்தானே?அரசுப்பதவி எதுவும் வகிக்காமல் அவர்கள் அளப்பரிய சாதனைகளைச் செய்யவில்லையா? முதல்வர் பதவிக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்வேன் என்பது என்ன வகை அரசியல்?

ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்