இப்படிக்கு இவர்கள்: உண்மையான அரசு மக்கள் மீது சுமையேற்றாது!

By செய்திப்பிரிவு

உண்மையான அரசு மக்கள் மீது சுமையேற்றாது!

னவரி 24 அன்று வெளியான ‘பேருந்துக் கட்டண உயா்வைத் திரும்பப் பெறுங்கள்’ என்கிற தலையங்கம் படித்தேன். பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட குரலாக இந்தத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. பேருந்து ஊழியா்கள் சம்பள உயா்வு கேட்டுப் போராடியதால், அதைச் சரிசெய்வதற்குப் பேருந்துக் கட்டணத்தை உயா்த்தி, மக்களை அவதிக்குள்ளாக்குவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. திடீரென்று எல்லா பேருந்துகளிலும் ரூ. 5 முதல் ரூ. 24 வரை அதிகப்படுத்தி, அதை நடைமுறைப்படுத்தியிருப்பது எல்லாத் தரப்பினர் மத்தியிலும் பேரதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கட்டண உயா்வு, ஏழைய எளிய மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று தமிழக அரசு துளிக்கூட எண்ணிப்பார்க்கவில்லை. எரிபொருள் விலையேற்றம், பராமரிப்புச் செலவு, ஊதிய உயா்வு ஆகிய காரணங்களால்தான் கட்டண உயா்வு என்று அரசு பல காரணங்களைச் சொன்னாலும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. மக்களுக்கான உண்மையான அரசு, நிதிப் பற்றாக்குறையை நீக்க வேண்டும் என்பதற்காக, மக்களின் மீது சுமையைச் சுமத்தாது. மாற்று வழியைக் கண்டுபிடிக்க துறைசார்ந்த அறிஞர்கள் குழுவை அமைக்க வேண்டும். அவா்களின் பரிந்துரைகளைக் கேட்க வேண்டும். அரசுத் தரப்பில் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கலாம். சாலைகளைத் தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் அரசுப் பேருந்துகளின் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கலாம். இதையெல்லாம் செய்யாத அரசு மக்களைக் கொடுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. எனவே, பேருந்துக் கட்டண உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் அல்லது கணிசமாகக் குறைக்க வேண்டும்.

- அ.இருதயராஜ், லென்ஸ் ஊடக மையம், மதுரை.

சேவை வியாபாரமாக்கப்படுகிறதா?

மிழக அரசு பேருந்துக் கட்டணத்தை 55 % முதல் 100 % அளவுக்கு தற்போது உயர்த்தியுள்ளது. ‘பேருந்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணத்தை அதிகரித்துள்ளோம்.. மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறது அரசு. பேருந்து, ரயில், வங்கி, தபால் என மக்களுக்காகச் செயல்படும் துறையைச் சேவை நிறுவனங்கள் என்கிறோம்.

சேவை என்பது லாப நோக்கமற்றது என்பதை மத்திய - மாநில அரசுகள் மறந்துவிட்டன. மக்களிடையே நேரடித் தொடர்புள்ள பேருந்து சேவையின் கட்டண உயர்வு, சாமானியனைத் திணறவைத்துள்ளது. கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்குத் தினமும் பணிக்காகப் பயணிப்பவர்கள், நகரங்களில் பணிபுரிபவர்கள் வாரம் ஒரு முறை குடும்பத்தைப் பார்க்கப் பயணம்செய்பவர்கள் என அனைத்து வகையான மக்களையும் இந்தக் கட்டண உயர்வு முற்றிலும் பாதித்துள்ளது. பேருந்து சேவை மக்களின் அடிப்படைத் தேவை என்பதை அரசு உணராமல், அதை மக்கள் மீது திணிப்பது எந்தவகையில் நியாயம்?

- ராஜஇந்திரன், காரைக்கால்.

சட்டங்களால் என்ன பயன்?

ருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்கள் பற்றிய கட்டுரை படித்தேன். அதிர்ச்சியாக இருக்கிறது. எம் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கத் தகுதியிருந்தும் ‘நீட்’ என்ற மறு தகுதித் தேர்வு தேவை என்றது, அந்தத் தகுதியையும் பெற்ற பின்பு, உனக்கு இங்கு இடமில்லை.. படிப்பதற்குப் பல மைல்கள் செல்ல வேண்டும் என்றார்கள். கனவை மட்டும் சுமந்துசென்ற எங்களைச் சாதியையும் மதத்தையும் வைத்து, மருத்துவம் பயிலச் சென்ற இடத்திலும் மரணத்தை மட்டுமே பரிசாக அளிப்போம் என்று அந்த இடத்தையும் கொலைக்களமாக மாற்றினால் அது நீதியா.. அது அநீதி இல்லையா? இந்தியாவில் போதுமான அளவுக்குச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தச் சட்டங்களால் என்ன பயன்? அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமையைச் சரிவரப் பின்பற்றினாலே போதுமானது.

- இரா.கிருபாகரன், பெரம்பலூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்