நஷ்டத்தை அரசுகளே ஏற்பதுதான் முறை
ர
யில், டிராம், பேருந்து போன்றவற்றை இயக்குவதைச் சேவையாக மட்டுமின்றி, ஒரு கடமையாகவே அரசுகள் செய்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோர் உல்லாசப் பயணங்கள் மேற்கொள்ளப் பயன்படுத்துவதில்லை. மாறாக, தம் பணியிடத்துக்குச் சென்று திரும்பவே பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக அவர்கள் மறைமுகமாக நாட்டின் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றனர். அதனால், அவர்களுக்குப் போக்குவரத்து வசதிசெய்து கொடுப்பதன் மூலம் நாட்டுக்கே நன்மை கிடைக்கின்றது. எனவே அரசோ, மாநகராட்சிகளோ போக்குவரத்து வசதி செய்துகொடுப்பதைத் தம் கடமையாகக் கருத வேண்டும். எனவே, ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் லாபம் காண முற்படாது நஷ்டத்தை அரசுகளே ஏற்பதுதான் முறை.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
மிகவும் கண்டனத்துக்குரியது
ச
மீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வுக்கு அரசுத் தரப்பில் கூறப்படும் விளக்கங்கள் ஏற்புடையதல்ல. அமைச்சர்களும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் முரண்பட்ட கருத்துகளைக் கூறுகின்றனர். மக்களின் நிலையைச் சற்றும் கவனிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு இது. மேலும், மாநகரப் பேருந்துகளில் சொகுசுப் பேருந்து என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டனத்துக்கு உரியது. ஏனெனில், பெரும்பாலான பேருந்துகள் ஆயுள் கடந்தவை. அதில் சொகுசு என்று கூறுவதற்கு எந்த வசதியும் இல்லை. பல பேருந்துகள் இருக்கைகள் உடைந்தும், ஜன்னல் கண்ணாடிகள் அசைக்க முடியாமலும் உள்ளன. இத்தனைக் குறைபாடுகளுடன் இயக்கப்படும் பேருந்தை எப்படி சொகுசுப் பேருந்து என்று கூறி, மக்களிடம் அதிகக் கட்டணம் வசுலிக்கலாம்? இவற்றையெல்லாம் சரிசெய்ய என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
- சுப்ரமணி சிற்றரசன், சென்னை.
தவறான அணுகுமுறை
ம
த்திய அரசின் நீதித் துறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து, ரவிக்குமார் எழுதிய கட்டுரை (ஜன. 22) படித்தேன். மலிமத் குழு அளித்த பரிந்துரைகள், அதிகாரக் குவிப்புக்கு வழிவகுப்பதாகவும், கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதாகவும் அமைந்துள்ளன. ஏற்கெனவே நீதித் துறை, பல்வேறு புகார்களைச் சந்தித்துவரும் வேளையில், நீதிபதிகள் அதிகாரத்தைக் குவிக்கும் நடவடிக்கை, நிச்சயம் தவறான அணுகுமுறையாகவே அமையும். ‘பெடரல் நீதிமன்றங்கள்’ அமைத்து, மாநில அரசுகளின் எஞ்சியுள்ள அதிகாரங்களையும் பறிக்க நினைப்பது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கே வழிவகுக்கும். எனவே, மாற்றுவழியில் நீதிபதிகள் கூட்டாக முடிவெடுப்பதை உறுதிப்படுத்தவும், வழக்குகள் விரைவில் முடிய வழிசெய்வதுமே சிறந்த சீர்திருத்தமாக அமையும்.
- செ.த.ஆகாஷ், மாணவர், தஞ்சாவூர்.
நிலைக்கட்டும் நீதி
ஜ
ன. 22 அன்று வெளியான ‘நீதித் துறை தன்னுடைய இடத்தை இழந்துவிட கூடாது’-தலையங்கம் கவனமாகப் படித்தறிய வேண்டிய ஒன்று. இன்றைய அரசியல் சூழலில் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், நிர்வாக இயந்திரங்கள் தடம்புரளும்போது மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள்தான் இருக்கின்றன. ஆனால் அங்கேயும் நிலைமை சீராக இல்லாவிட்டால் பாதிக்கப்படுவது சாமானியர்கள்தான். தற்போதைக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை என்றாலும், அப்படி ஒரு சூழல் உருவாகாது என்பதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பது, நாட்டின் கண்ணியத்தையே பாதுகாப்பதற்கு ஒப்பாகும். மக்கள் நம்பிக்கை வீணாகக் கூடாது!
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago