இப்படிக்கு இவர்கள்: வாக்காளர்களே ஊழலில் பங்கெடுப்பது எத்தனை அபாயம்!

By செய்திப்பிரிவு

வாக்காளர்களே ஊழலில் பங்கெடுப்பது எத்தனை அபாயம்!

னவரி 2 அன்று வெளியான ‘ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்’ என்னும் கட்டுரை, மக்களாட்சிக் கோட்பாடுகளின் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களின் மனசாட்சியாகவே இருக்கிறது. தேர்தல் தள்ளிப்போடப்பட்டதாகட்டும், அதிரடியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகட்டும், ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்திலிருந்து வந்த செய்திகளாகட்டும், வெகுவாக நம்மைப் பாதித்தது. இந்திய அளவில் தலைநிமிர்ந்தே இருந்த தமிழகம், அவமானம் சுமக்க நேர்ந்த நிகழ்வுகளில் முக்கியமானதாகவும் சமீபத்திய சில ஆண்டு தேர்தல் முறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கட்டுரை நெடுக இன்றைய அரசியல் நிலையையும், கட்சிகள் கவனம் செலுத்த வேண்டியவற்றையும் ஆராய்ந்து செல்கையில், பணம் கொடுத்து வாக்காளனை வாங்குவது குறித்து ஆராயவில்லையே என்று எண்ணுகையில், சாட்டையடி கொடுத்து கட்டுரை நிறைவு செய்யப்பட்டது அருமை; அவசியமும்கூட! அரசியல் ஒரு சாக்கடை, அது வேண்டாம் என்று பேசிய வீடுகளும், அந்தச் சாக்கடையில் இறங்கிச் சுத்தம்செய்ய வேண்டும் என்று பேசிய இளைய தலைமுறையும் இருந்த வீடுகளெல்லாம் இன்று பணத்துக்கு வாக்கை விற்பது அபாயம் நிறைந்த நிலை. அரசியல்வாதிகள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டிய காலத்தில், வாக்காளர்களே ஊழலில் பங்கெடுப்பது எத்தனை அபாயம். இன்றைய உடனடித் தேவை அரசியல்வாதிகளுக்கு முன்பாக வாக்காளர்கள் திருத்தப்பட வேண்டும்.

- வ.சி.வளவன், சென்னை.

புத்தாண்டும் புத்தகமும்

பு

த்தாண்டுப் பிறப்பைப் புத்தகங்களுடன் கொண்டாடிய நிகழ்வு தித்திக்கும் செய்தியாகும் (ஜன.2). கலந்துகொண்டு சிறப்பித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் அசத்தலாக இருந்தது. இப்படி ஒரு அறிவுசார் நிகழ்வைப் பண்பாட்டுடன் கலந்து நீங்கள் முன்னெடுத்த பாதை வளரும் என்பதில் ஐயமில்லை.

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

அரசு கவனம் செலுத்துமா?

ன. 3 அன்று வெளியான ‘முடங்கிப்போனது ரோமன் ரோலண்ட்’ நூலகம் செய்தி படித்தேன். நூலக வரலாறும் அதன் இன்றைய அவல நிலைகளையும் அப்படியே வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. ஆண்டுக்கு ரூ.7,000 கோடி வரவு செலவு செய்யும் புதுச்சேரி அரசு, நூலகத்துக்குச் சில லட்சங்களை ஒதுக்காமல் புறக்கணித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 55 நூலகங்களே உள்ளன.பெரும்பாலானவை வாடகைக் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. அவற்றுக்கான வாடகையைக்கூட பல ஆண்டுகளாக சரிவரக் கொடுக்கவில்லை. மேலும், நூலகங்களுக்கு வந்துகொண்டிருந்த நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்றவற்றில் பெரும்பாலானவை சந்தா செலுத்தாததால் நிறுத்தப்பட்டுவிட்டன. நூலகங்களை மட்டுமே நம்பி தினமும் படிக்கச் செல்லும் வாசகர்கள் படிக்க இதழ்கள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பல முறை சுட்டிக்காட்டியும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ‘தி இந்து’ சுட்டிக் காட்டியதற்குப் பின்னராவது அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

- தூ.சடகோபன், தலைவர், புதுச்சேரித் தன்னுரிமைக் கழகம்.

ஊடகங்களே வழிகாட்டி!

தி

ரைப்பட நடிகர், கிரிக்கெட் வீரர் ஆகியோருக்கு ஊடகங்கள் கொடுக்கும் இடத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட விஞ்ஞானிகள், உயிர் காக்கும் மருத்துவர், தூக்கு மேடையினின்று ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய வழக்குரைஞர், காலமெல்லாம் மக்கள் பணியாற்றும் சமூக சேவகர் போன்ற ஆளுமைகள் பெறுவதில்லை. அவர்களில் பெண்கள்கூட இரண்டாம்பட்சம்தான். 1996-ல் மக்கள் முடிவெடுத்த பின் குரல்கொடுத்த ரஜினி 2006-ல் மௌனமாக இருந்தார். ஆட்சி மாற்றங்கள் தொடர்கதையாகவே நிகழ்ந்துள்ளன. சில இலவசங்களில் மக்களைக் கட்டிப்போட்டு, தாங்கள் பெருங்கொள்ளையில் ஈடுபடலாம் என்பதே இன்றைய நடைமுறை. மக்களுக்குச் சரியான வழிகாட்டியாக ஊடகங்கள் திகழ வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்