இப்படிக்கு இவர்கள்: ஊழலும் தண்டனையும்

By செய்திப்பிரிவு

ஊழலும் தண்டனையும்

கால்நடைத் தீவன ஊழலின் 3-வது வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை, ஊழலில் ஈடுபடும் அரசியல் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய எச்சரிக்கை. அதேசமயம், நாடறிந்த முக்கியத் தலைவரான லாலு பிரசாதுக்கு இப்படிப்பட்ட வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது வருத்தம் தருகிறது. காங்கிரஸ் செல்வாக்கிழந்தபோது பாஜகவுக்கு மாற்றாக மதச்சார்பற்ற அணியை ஒன்று திரட்டி, அந்த அணியை பிஹாரில் வெற்றிபெறச் செய்தவர் அவர். மறைந்த சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் சீடர். லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சியினர், போர்க்குணமுள்ள லட்சியவாதிகள். பதவிக்காக எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள். இந்தக் கட்சியில்தான் அரசியல் ஜாம்பவான்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், மதுலிமயே, ரபிராய், முலாயம் சிங், கர்ப்பூரி தாக்கூர், பெரோஸ் காந்தி போன்ற தலைவர்கள் உருவாயினர். இப்படிப்பட்ட கட்சியில் உருவான லாலு ஊழல் புகாருக்கு ஆட்பட்டு தண்டனை பெற்றுவருவது வேதனையான விஷயம்!

- சிவ.ராஜ்குமார். சிதம்பரம்.

இந்தியாவின் பன்மைத்துவம்

ஜன.25 தேதியிட்ட இதழில் தொல்.திருமாவளவன் எழுதிய ‘இந்தியாவின் பன்மைத்துவம் காக்கப்பட மாநில சுயாட்சி முக்கியம்!’ கட்டுரை படித்தேன். நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை மத்தியப் பட்டியலில் சேர்த்தார் இந்திரா காந்தி. தற்போது, ‘அறிவிக்கப்படாத’ நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவருகிறார் பிரதமர் மோடி. மாநிலங்களுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருப்பது சரியல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வதை மத்திய அரசே மீறுவது நியாயமற்றது.

- புதுவை சீனு. தமிழ்மணி. புதுச்சேரி.

இது நியாயம்தானா?

ஜன்.24-ல் வெளியான ‘பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுங்கள்’ எனும் தலையங்கம் வெகுஜன மக்களின் உணர்வைத் துல்லியமாகப் பிரதிபலித்தது. சொகுசுப் பேருந்து என்று அழைக்கப்படும், பிளாஸ்டிக் இருக்கைகள் கொண்ட லொட லொட தாழ்தள ஓட்டைப் பேருந்தில் மதுரை பீபி குளத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை பயணம்செய்தேன். ரூ. 9 கட்டணம் ரூ. 19 ஆகி உள்ளது. உயர்வு 111 சதவீதம். திருமங்கலத்திலிருந்து மதுரை பார்க்டவுனுக்கு கட்டணம் ரூ 21 ஆக இருந்தது ரூ 37 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இவ்வளவு அதிகம் உயர்த்தப்பட்டதில்லை. இதுவரை திருச்சி, கோவை போன்ற மாநகரங்களில் குறைந்த கட்டணம் ரூ 2 ஆகவும், சென்னையில் ரூ 3 ஆகவும் இருந்திருக்கிறது என்பதை நாளிதழ்களில் படிக்கும்போது அதிர்ச்சியும், ஏமாற்றமுமாக இருந்தது. ஏனெனில், மதுரையில் சில வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட்ட, எப்போதாவது அத்திப்பூத்தாற்போல வரும் சாதாரண அரசுப் பேருந்துகளில்கூட வசூலிக்கப்பட்ட குறைந்தபட்சக் கட்டணம் ரூ 5 மற்றும் ரூ 6. மிக அதிகமாக இயக்கப்பட்ட மற்ற பேருந்துகளுக்குக் குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 7 மற்றும் ரூ 9. மற்ற ஊர்களுடன் ஒப்பிட்டால் மதுரையின் பழைய கட்டணமே அதிகம். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உயர்வு அதிகபட்சமாக 120%. இதனையும் சேர்த்து மற்ற ஊர்களுடன் ஒப்பிட்டால், மதுரை மக்களுக்கு அளிக்கப்பட்ட பொங்கல் பரிசு 270%-லிருந்து 320% வரை கட்டண உயர்வு! இது நியாயம்தானா?

- சேதுராமு, மதுரை.

அரசே இப்படிச் செய்யலாமா?

மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கிவைக்கிறார்கள். மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்கிறார்கள். நல்ல செய்திதான். ஆனால், அரசே மதுவின் தீமையை மக்களுக்கு விளக்கிச் சொல்லி விட்டு, மதுக் கடைகளையும் நடத்தலாமா? இது பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போன்ற கதையாக உள்ளது அல்லவா?

- வ. சக்கரபாணி. அல்லப்பனூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்