உறவினர்களின் கடமை
டி
ச.15ல் வெளியான, ‘மரண வலிக்கு மரணம்தான் தீர்வா?’ கட்டுரையைப் படித்தேன். மனிதநேயம் குறைந்துகொண்டிருக்கிறது என்று பொதுவாகச் சொன்னாலும், நோயாளிகளின் உறவினர்கள்கூட கடமையாற்றாமல் இருப்பது மனித சமுதாயத்துக்கே இழுக்கு. இமயம் காப்பகத்தின் பொறுப்பாளர்களான மருத்துவர் அபுல்ஹசனும் அவருக்கு உதவியாக இருக்கும் முருகன் - பூங்கொடி தம்பதியரும் பாராட்டுக்குரியவர்கள். வலியோடு போராடிக்கொண்டிருக்கும் நோயாளியை உறவினர்கள் பரிவோடு அணுக வேண்டும். ஒருவர் நலமாக இருக்கும்போது அவரால் கிடைக்கும் நன்மைகளுக்கு உரிமை கொண்டாடும் உறவினர்கள், அவருடைய உடல் நலம் பாதிக்கப்படும்போது, அவரைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அரசாங்கத்திடமும் சமூக அமைப்பிடமும் தள்ளிவிடுவது மனிதநேயமற்ற செயல்.
- முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.
ஏனிந்த தாமதம்?
அ
ப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி, ‘ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதால், உண்மையை மறைத்து அறிக்கை வெளியிட்டோம்’ எனத் தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்தில் உண்மையை மறைத்ததில் தவறில்லை. ஆனால், அவர் இறந்த உடனே உண்மையை உலகுக்குச் சொல்லியிருக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு இதனைச் சொல்வது ஏதோ உள்நோக்கமுள்ள செயலாகவே நினைக்கத் தோன்றுகிறது.
- வெங்கடராமசுப்பு, கல்லிடைக்குறிச்சி.
அச்சுறுத்தும் சமத்துவமின்மை
வ
ணிகப் பக்கத்தில் வெளியான, ‘இந்தியாவில் அதிகரிக்கும் வருமான சமத்துவமின்மை’ (டிச.17) செய்தியை வாசித்தேன். 0.1 % பணக்காரர்களின் சொத்து மதிப்பு வருமானம் குறைந்த 50 % மக்களின் சொத்து மதிப்பைவிட அதிகமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பணக்கார நிறுவனங்களின் கண்மூடித்தனமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மொனாபலி அண்ட் ரெஸ்ட்ரிக்டிவ் பிராக்டீஸஸ் ஆக்ட் போன்றவை இருந்தாலும் விளம்பரத்தாலும், மற்ற நிறுவனங்களை வேரறுக்கும் நடவடிக்கைகளாலும் அவற்றின் வளர்ச்சி பன்மடங்காக அதிகரித்துள்ளது. பெரும்பணக்காரர்களிடம் பணம் மேலும் மேலும் குவியக் காரணம், முறையற்ற வருமானமும் சுரண்டலுமே. எனவே, லஞ்ச ஊழல் தடுப்புத் துறை, வருமானவரித் துறை இவற்றை அரசு முடுக்கிவிட்டு, முறையற்ற வருமானத்துக்கு முடிவுகட்ட வேண்டும். ஒவ்வொரு வேலைக்கும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். இப்படிச் செய்தால் வருமான சமத்துவமின்மை குறையும்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
ஈவிரக்கம் இல்லையா?
நோ
ய் பாதித்து இறந்த கோழிகள் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவது பற்றிய புதுமடம் ஜாபர் அலியின் கட்டுரையை (டிச.14) படித்ததும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மனிதாபிமானம் மறந்து, பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு, இறந்த கோழிகளைத் தள்ளுவண்டிக் கடைகளுக்கு விற்கும் கீழ்மையாளர்களுக்கு அரசு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். கோழிப் பண்ணைகளின் உரிமையாளர்களும் இறந்த கோழிகளை வீசி எறியாமல், பொறுப்புடன் பாதுகாப்பான முறையில் புதைக்க வேண்டும். மக்களும் தகுந்த விழிப்புணர்வுடன் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்து, உடல் நலத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago