இப்படிக்கு இவர்கள்: மனதைத் தொட்ட பதிவு!

By செய்திப்பிரிவு

மனதைத் தொட்ட பதிவு!

நோ

யாளிகளுக்குச் சிகிச்சை எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அரவணைப்பு. அது பலருக்கு அவர்கள் உறவினர்களிடமிருந்துகூடக் கிடைப்பதில்லை என்பது பெரும்துயரம். ஆனால், ‘இமயம் காப்பகம்’ போன்ற சமூக அமைப்புகள், கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் சக மனிதர்களை அவர்கள் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வதும், முகம் சுளிக்காமல் மருத்துவ சிகிச்சை அளிப்பதும் நிச்சயம் பாராட்டுக்குரியவை. மருத்துவர் அபுல்ஹசன், அங்கு சேவையாற்றும் முருகன் - பூங்கொடி தம்பதியர், இமயம் காப்பகத்துக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். இப்படியான நல்ல உள்ளங்கள் இருப்பதை இக்கட்டுரை மூலம் வெளிக்கொணர்ந்த ‘தி இந்து’வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.

பிரமிக்க வைக்கும் பேருழைப்பு

டி

சம்பர் 14 அன்று வெளியான ‘தலைவர்-11’ கருணா நிதி குறித்த தகவல் தொகுப்பில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை. கருணாநிதியின் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் அவரது உழைப்புதான் என்பதை அவை எடுத்துக்காட்டின. தன் மகன்களுக்கு அவர் பெயர் வைக்கக் காரணம், கட்சித் தொண்டர்களிடம் அவர் பழகிய விதம், நேரம் காலம் பார்க்காமல் மேற்கொண்ட தேர்தல் பணி, தோல்வியைச் சந்திக்காத முதல்வர் என்ற பெருமை, கூட்டணி உத்திகள், எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளும் துணிச்சல் என்று அவரைப் பற்றிய ஒவ்வொரு தகவல்களும் பிரமிக்க வைக்கின்றன.

- வ.சக்கரபாணி, அல்லப்பனூர்.

மக்கள் ஆய்வின் முன்னோடி

ன்னர்களின் பெருமைகளை மட்டுமே எழுதியும் படித்தும் வந்த காலத்தில், உழைக்கும் மக்களின் பெருமைக்குரிய வாழ்வை எழுதியவர் ந.வானமாமலை. அவரைப் பற்றி பிரபஞ்சன் எழுதியுள்ள ‘ஓர் ஏர் உழவன்’ கட்டுரை (டிசம்.13) ந.வா.வின் நூற்றாண்டு விழாவின்போது மிகச்சிறந்த அஞ்சலியாக அமைந்துள்ளது. தமிழால் முடியும் என்ற பேராசிரியரின் சொற்கள் இன்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவை. இந்தக் கட்டுரையைப் படித்ததும் கிராமப்புறங்களில் வில்லுப்பாட்டில் குலசேகர ராஜா கதை கேட்டது ஞாபகம் வந்தது.

- எஸ்.பாலகணேஷ், மாதவன்குறிச்சி.

முதல்வர் அனைவருக்குமானவர்

அல்லவா?!

டி

ச. 15 அன்று ‘ஆளுங்கட்சி வென்றால்தான் ஆர்.கே.நகர் வளம் பெறும்’ என்று தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார் என்ற செய்தியைப் படித்தேன். அப்படியென்றால், ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் தோற்றுவிட்டால், அந்தத் தொகுதிக்கு எதுவும் செய்ய மாட்டோம் என்று பொருளா? முதல்வர் என்பவர் வென்ற தொகுதிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலத்துக்குமானவர் அல்லவா?!

- ஹெச்.உமர் பாரூக், வேடசந்தூர்.

சட்டங்களால் என்ன பயன்?

டி

சம்பர் 14 அன்று வெளியான ‘கலப்படம் என்னும் பயங்கரம்; அரசு கண்டுகொள்வது எப்போது?’ கட்டுரையைப் படிக்கும்போதே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்ற அமைப்பின் முதன்மை நோக்கமே சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பதுதான். The Prevention of Food Adulteration Act(1954), Food Safety and Standards Act (2006) என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், இவ்வளவு தவறுகள் நடந்தால் எப்படி நம்பி உணவுப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது?

- புவனகிரி.ச.வேல்முருகன், மேல்மருவத்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்