இப்படிக்கு இவர்கள்: புதுகைக்குப் புகழ் சேர்த்த ‘அறந்தை’!

By செய்திப்பிரிவு

புதுகைக்குப் புகழ் சேர்த்த ‘அறந்தை’!

பு

துக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி நவ.26-ல் வெளியான, ‘இது புத்தகக் கோட்டை’ கட்டுரையில் அந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பல எழுத்தாளர்களையும், ஆளுமைகளையும் பட்டியலிட்டிருந்தார் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. அந்தப் பட்டிலில் இடம்பெற வேண்டியவர் எழுத்தாளர் ‘அறந்தை’ நாராயணன். புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுகாசாவயல் எனும் கிராமத்தில் பிறந்து, அறந்தாங்கி யில் ஆரம்பக் கல்வி பயின்றவர். 72 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். ‘ஜனசக்தி’ மற்றும் ‘கல்பனா’ முதலிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும், திரைத் துறை, அரசியல், நாடகம், நாவல், கட்டுரை என அனைத்திலும் பாட்டாளியின் பதாகையை எழுத்தில் ஏந்தியவர். ‘கலைமாமணி’ விருது பெற்றவர். இவரின் ‘தமிழ் சினிமாவின் கதை’ எனும் நூல், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியிடம் தேசிய விருதும் பெற்றவர். புதுகை மண்ணுக்குப் புகழ்சேர்த்த ‘அறந்தை’யின் புகைப்படம் சென்ற ஆண்டு, புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிலும் இடம்பெற்றிருந்தது.

- காசாவயல் குமார், அறந்தாங்கி.

அறிவுக்கு அடிப்படை

பு

திய பாடம்... புதிய பாதை? எனும் தலைப்பில் ப.சிவக்குமார், கு.காந்தி ஆகியோரின் கட்டுரைகளை வாசித்தேன். பாடத்திட்டம் தொடர்பாக மக்களின் விழிப்புணர்வினையும் பங்களிப்பினையும் ஏற்படுத்தும் வகையில் அவை அமைந்துள்ளன. இத்தகைய கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இன்னும் பரவலாக பலராலும் நிகழ்த்தப்படுதல் அவசியம். பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியின் மீது அக்கறை கொண்டோரில் எவ்வளவு பேர் அக்கறையுடன் இணையத்தில் கண்டனர் என்பது தெரியவில்லை என்பதால், ‘தி இந்து’வின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. கூடவே, 1 முதல் 10 வகுப்பு வரையிலும் உள்ள கணிதம், அறிவியல் (சூழலியல்), சமூகவியல் பாடத்திட்டங்களை மட்டுமாவது சுருக்கமாக நாளிதழில் வெளியிட்டிருந்தால் பலரும் அதனைக் கண்டு சிந்திக்க வாய்ப்பாக அமைந்திருக்கும். காரணம், இந்த வகுப்புப் பாடங்கள்தான், தமிழகத்தின் இளைஞர்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்குபவை.

- த.சற்குணம் ஸ்டீபன், பேராசிரியர் (ஓய்வு),

மின்னஞ்சல் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்