தேவை விழிப்புணர்வு
டி
சம்பர் 18 அன்று வெளியான ‘நதிகளை வணங்கி, கொல்கிறோமா?’ என்ற கட்டுரையை வாசித்தபோது, சமீபத்தில் ஆற்றில் துணிகளைப் போட்டுவிட்டு, எவ்வித சங்கட உணர்வும் இன்றி திரும்பியவர்களின் செய்கை நினைவுக்குவந்தது. நம் நாட்டில் நதிகளைப் போற்றுகிறோம், வணங்குகிறோம். ஆனால், அதன் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கும் அரசுக்கும் இல்லை. தொழிற்சாலைகளும், நகர்மன்றங்களும் கழிவுநீரை ஆற்றில் கலக்கச்செய்கின்றன. அதற்கு இணையாக, வழிபாடுகளின் பெயராலும் ஆற்றை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறோம். நதிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.
மீனவர் நலனில் அக்கறை தேவை
ந
டப்புக் கணக்குப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரிப்பதுதான். இப்படியான பொருளாதார நிலையில், மீன் ஏற்றுமதி மூலம் அரசுக்கு அந்நியச் செலவாணியாக ஆண்டு ஒன்றுக்கு ₹50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. இருப்பினும், மீனவர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்புக்கான போதிய அக்கறை காட்டாமலும் மீனவர்களைத் தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் புறக்கணித்துவருவது எந்தவிதத்தில் நியாயம்? இதைத்தான் டிச.15அன்று கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘நமக்கு நல்ல மீன்கள் வேண்டுமல்லவா?’ என்ற கட்டுரை உணர்த்தியது.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
கல்லிலே கலைவண்ணம்...
நா
ட்டில் காண வேண்டிய கோயில்களும் சிற்பங்களும் ஏராளம் உள்ளன. ஒருவர் எல்லாவற்றையும் காண்பதும் ரசித்தலும் அரிது. கலை ஆர்வலர் தியடோர் பாஸ்கரன், அவற்றைக் காண வாய்ப்பில்லாதவர்களுக்குத் தனது எழுத்துகள் வழியே அந்த அனுபவத்தைத் தொடர்ந்து தந்துவருகிறார். கலை ஞாயிறு பகுதியில் வெளியான, ‘நாயகன் நின்று நடம்செய்யுமாறே’ என்ற கட்டுரையில் (டிச.17) திருவண்ணாமலை மாவட்டம், தேசூரில் பாறையைக் குடைந்து எடுப்பித்த ஒரு குடவரை ஆலயத்தின் கற்சிற்பங்களை விவரிக்கும்போதே கற்பனையில் விரிகிறது காட்சி.
- பொன்.குமார், சேலம்.
அழுத்தமான எச்சரிக்கை
உ
டுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு மூலம், நீதிபதி அலமேலு நடராஜன் ஆணவக் கொலைகளுக்கும் தீண்டாமைக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிரான அழுத்தமான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். தன் கணவரின் மரணத்துக்காகப் போராடி இந்தத் தீர்ப்பைப் பெற்றிருக்கும் கவுசல்யா பாராட்டுக்குரியவர். சங்கர் கொலையின் தீர்ப்பு, ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அமைய வேண்டும்.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
மக்களுக்கும் பங்கிருக்கிறது
பு
துமடம் ஜாபர் அலியின், ‘கலப்படம் எனும் பயங்கரம்’ (டிச.14) கட்டுரையைப் படித்தேன். அதில் அரசு எப்போது இதைக் கண்டுகொள்ளும் என கட்டுரையாளர் கேட்டிருக்கிறார். முதலில் மக்களும் தங்களைத் தாங்களே மனரீதியாகவும் செயல்ரீதியாகவும் திருத்திக்கொள்ள வேண்டும். மக்களின் நடத்தை, செயல் சரியில்லாதபோது அரசை மட்டுமே குறை கூறுவதால் எதையுமே சாதிக்க முடியாது. மக்கள் இங்கே மனசாட்சியை, தனிமனித ஒழுக்கத்தை மூட்டை கட்டிவிட்டு வாழும்வரை, லஞ்ச லாவண்யம், கொலை, கொள்ளை, கலப்படம், திருட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, சாலை விபத்து மற்றும் இன்னும் பல அக்கிரமங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். முதலில் மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்குவோம்.
- பாஸ்கரன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago