இப்படிக்கு இவர்கள்: மக்களும் உள்ளாட்சிகளும்

By செய்திப்பிரிவு

வம்பர்-15 அன்று வெளியான ‘குடிநீர் வழங்கலும் கழிவுநீர் அகற்றலும்: சுகாதாரத்தின் இரு கண்கள்’ என்ற கட்டுரை வாசித்தேன். தற்போதைய காலகட்டத்தில் மக்களும் அரசும் விழித்துக்கொள்ள எழுதப்பட்ட கட்டுரையாகத் தோன்றுகிறது. ஒரு கிராமமோ, நகரமோ எதுவாக இருந்தாலும் அது ஒரு மனித உடலைப் போன்றதுதான். மனித உடல் உணவையும் நீரையும் ஏற்றுக்கொண்டபின், சரியான முறையில் அவை சிறுநீராகவும் மலமாகவும் வெளியேற வேண்டும். அப்படிச் சரியானபடி வெளியேறாவிட்டால், மனிதனின் நிலை கவலைக்கிடம்தான்.

அப்படித்தான் நமது நகரமும் கிராமமும். குடிநீர் வழங்குவதற்கு உள்ளாட்சிகள் காட்டும் அக்கறையை, கழிவுநீர் அகற்றலுக்கும் திடக்கழிவு மேலாண்மைக்கும் காட்டுவதில்லை என்பதால், நமது நகரங்களும் கிராமங்களும் எப்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியைப் போன்றே அபாயக் கட்டத்திலேயே இருக்கிறது. சரியான முறையில் குடிநீர் வழங்கப்படாவிட்டால்கூட காசு கொடுத்தாவது குடிநீரை வாங்கிப் பயன்படுத்துவதில் காட்டும் அக்கறையை, மக்களும் தங்கள் வீட்டுக் கழிவுநீர் அகற்றலுக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தலுக்கும் காண்பிப்பதில்லை என்பதே உண்மை. நாம் செலுத்தும் சொத்துவரியில் குடிநீர் மற்றும் வடிகால் என்ற தலைப்பில் குறிப்பிட்ட சதவிகிதம் உள்ளாட்சிக்குச் செலுத்துகிறோம் என்பதை மக்கள் மட்டுமல்ல; உள்ளாட்சிகளும் மறந்து விடுகின்றன.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

டெல்லியைச் சூழ்ந்துள்ள அச்சம்!

வா

ழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் தலைநகரான டெல்லியும் இடம்பிடித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவாசக் கவசம் அணிந்து வலம் வருவது வேதனையானது. பாலியல் பலாத்காரப் பிரச்சினை, வாகனக் கடத்தல், வங்கிக் கொள்ளைகள், இவற்றோடு காற்று மாசும் சேர்ந்துள்ளது. ஒரு இலையைக் கூடக் கிள்ளிப் போடாமல் மாநில அரசு மீது பழியைப் போட்டுவிட்டு மத்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. தூசியைக் கட்டுப்படுத்தத் தெரியாத அரசு, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்து என்ன பயன்?

- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.

நேரு எனும் தீர்க்கதரிசி

சை எழுதிய, ‘சூச்சுகளின் காலத்தில் நேரு’ மிகவும் சரியான நேரத்தில் நினைவுகூரப்பட்ட கட்டுரை. நாட்டின் விடுதலைக்குப் பின் நாட்டை கட்டமைக்கும் வேலையில் இறங்கிய நேரு இந்தியா எப்போதும் மதச்சார்பின்மை கொண்ட நாடாகவே இருக்கும் என்பதில் அவர் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். நேரு ஆண்ட பதினேழு வருடத்தின் ஆகச்சிறந்த தாக்கம் எதுவாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “என்னுடைய அழுத்தமான சுவடாக ஜனநாயகம் இருக்கும்!” என்று அவர் சொல்லியிருந்தார். அதுவே நடந்தது. உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி.

-மு.விஜயலட்சுமி, மின்னஞ்சல் வழியாக.

காலாவதியான பேருந்துகள்

கா

லாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழகம் இரண்டாம் இடம் என்ற செய்தியை வாசித்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. பழைய பேருந்துகளை இயக்குவதால் எரிபொருள் விரயம் ஏற்படுவதுடன், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது. பொதுப் போக்குவரத்தின் நிதிநிலையை மேம்படுத்த, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கொண்ட குழுவை நியமிக்கலாம். இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பயனுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். இதுபோன்ற முன்னெடுப்புகள் மூலம்தான் பொதுப் போக்குவரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையும், அபிமானமும் ஏற்படும்.

-அலர்மேல்மங்கை, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்