வாசகர்கள் படத்தையும் வெளியிடலாமே!
ச
மீப காலமாக ‘இப்படிக்கு இவர்கள்’ பகுதியில் வெளியாகும் பதிவுகளுடன் வாசகர் பிரபலம் என்றால், அவர்களது புகைப்படத்தையும் ‘தி இந்து’ வெளியிடுகிறது. சமீபத்திய உதாரணமாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே.ரங்கராஜன், நடிகர் சிவகுமார் உள்ளிட்டோரின் கடிதங்களைக் குறிப்பிடலாம். இது வரவேற்கத்தக்கதே. ஆனால், பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அவர்கள் படத்தைப் போடாமலேயே, பெயரைப் படித்த நொடியிலேயே அவர்களது படம் வாசகர்களின் மனக் கண் முன் வந்துபோகும். பிரபலங்களின் படத்தைப் போட வேண்டாம் என்று சொல்லவில்லை; பெட்டிக் கடிதமாக யாருடையது வந்தாலும் அவர்கள் படத்தையும் சேர்த்துப் பிரசுரிக்கும் முறையைக் கொண்டுவரலாம்தானே! உதாரணமாக என் படம்.
- அ.ஜெய்னுலாபிதீன், சென்னை.
வாசகர்கள் எந்த நல்ல கருத்தை முன்மொழிந்தாலும் உடனே அதை ஏற்றுச் செயல்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் ‘தி இந்து’ நாளிதழ், வாசகர் அ.ஜெய்னுலாபிதீன் யோசனையையும் உவகையோடு ஏற்கிறது. தங்கள் படத்தோடு கருத்துகளை வாசகர்கள் அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம். இனி, பெட்டிக் கடிதங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவை சம்பந்தப்பட்ட வாசகர்கள் தங்கள் புகைப்படத்தை அனுப்பியிருக்கும் பட்சத்தில், அவர்கள் படங்களோடு வெளியாகும்.
- ஆசிரியர்
சட்டத் திருத்தம் வேண்டும்!
செ
ன்னையில் தொழிலதிபர் ஒருவரின் மகன் போதையில் ஓட்டிய சொகுசு கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான செய்தி மிகுந்த வேதனை தந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஏழை மக்கள்தான் பலியாகிறார்கள். அவர்களின் குடும்பங்கள் படும் துயரங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற சம்பவங்களை விபத்துகளாக மட்டும் கொள்ளாமல், கொலை வழக்குக்கு இணையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். பலியாகின்றவர்களின் குடும்பங்களுக்கு, இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணமானவர் களே இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். கடும் நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இம்மாதிரியான பிரச்சினைகளுக்குத் தீர்வு வராது!
- ஆர்.முருகேசன், அந்தியூர்.
தேவை கட்சிகளல்ல!
பு
திய புதிய கட்சிகளல்ல, தமிழக மக்கள் தன்மானத்துடனும் வளமுடனும் வாழ்ந்திட நடைமுறைப்படுத்தக் கூடிய சீரிய சமூக, பொருளாதாரத் திட்டங்களே இன்றைய தேவை. கமலோ மற்றவர்களோ அவ்வாறு தம் சிந்தனையில் உதித்த திட்டங்களை முன்வைக்க வேண்டும். அவற்றை ஏற்கும் கட்சிக்கு அவர்கள் ஆதரவைக் கொடுக்கலாம். மக்களை அவர்கள் இல்லங்களில் சந்திப்பதன் மூலமே மக்கள் பிரச்சினைகளை அறிய முடியும். கோபால கிருஷ்ண கோகலே தான் தொடங்கிய ‘இந்திய ஊழியர் சங்க’த்தில் ஒருவர் உறுப்பினராக வேண்டும் என்றால், இந்தியா முழுமையும் ஓராண்டு சுற்றிவர வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். அதன்படியே காந்தியடிகள் மதுரை வந்து, தம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டது வரலாறு. ஆனாலும் அவரால் இந்திய ஊழியர் சங்க உறுப்பினராக முடியவில்லை என்றாலும், அந்தப் பயணம் நாட்டுக்கு லாபமே. மக்கள் சார்பான அரசியலே இன்று தேவை.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா!
மை
தா சாப்பிடுதல் தீங்கானதுன்னுட்டு... பரோட்டாவை இவ்வளவு அழகான படமாகப் போட்டால் எப்படி..? இந்திய சுயநல அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து வாழ்வதைவிட பரோட்டா சாப்பிட்டுச் சாவதே மேல்!
- ஜவஹர், மின்னஞ்சல் வழியாக.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago