எட்டுத் திக்கும்…
எ
ஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சர்வதேசப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்பகங்கள் ஏன் பங்கேற்பதில்லை?’ (நவ.16) கட்டுரை படித்தபோது வருத்தமாய் இருந்தது. ஷார்ஜாவில் புத்தகக் காட்சியை எத்தனை அழகாய் ஏற்பாடுசெய்து, எவ்வளவு நேர்த்தியாய் நடத்தியிருக்கிறார்கள். தமிழர்களும் பெருமளவு வசிக்கிறார்கள். புத்தகங்களைக் கொண்டு வரவும், திருப்பி அனுப்பி வைக்கவும் உதவுகிறோம் என்று சொன்ன பின்பும் அரங்கு அமைக்கப்படவில்லை என்பது வெட்கத்துக்குரியது. பபாசி சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள் தமிழகத்தைப் புத்தக வாசிப்பை நோக்கித் திருப்பியிருக்கின்றன. அவர்கள் கடல் தாண்டியும் செயல்பட்டால், படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கொண்டாட்டம்தானே! ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்றார் பாரதி. அது போல் நாமும் எட்டுத் திக்கும் தமிழ் இலக்கியங்களைப் பரப்ப முயற்சி எடுக்க வேண்டிய தருணம் இது.
- ரஞ்சனி பாசு, மதுரை.
ரயில் கொள்ளைக்கு முடிவுகட்டுங்கள்
க
டந்த நவ.17 அன்று பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் வந்த என் உறவினரின் உடைமைகள் விடியற்காலையில் திருநெல்வேலிக்கும் வள்ளியூருக்கும் இடையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ அதேவேளையில், அதே இடத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் கொள்ளை நடந்துள்ளது. நாகர்கோவிலில் பல பயணிகள் ஒரே நேரத்தில் புகார் பதிந்துள்ளனர். மதுரைக் கோட்ட எல்லையான திருநெல்வேலியில் பாதுகாப்புக் காவலர்கள் இறங்கிவிடுகின்றனர். இந்த கொள்ளைகள் தொடர்ந்து ஒரே காலத்தில், ஒரே இடைவெளியில் நடப்பதாக ரயில்வே பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கொள்ளைகளின் காரணமும் காலமும் தெளிவாகியுள்ள சூழலில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதுதான் ரயில்வே அதிகாரிகளின் முதற்கடமை.
- வறீதய்யா கான்ஸ்தந்தின், தூத்தூர்.
என்ன செய்கிறார்கள் அதிகாரிகள்?
த
மிழகத்தில் நீண்ட தூரம் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் வழியில் உணவருந்துவதற்காகப் படும் சிரமங்களை ‘மோட்டல் என்னும் சுயாட்சிப் பகுதிகள் ’ என்ற ஒரு நிமிடக் கட்டுரையில் (நவ.16) கே.கே.மகேஷ் தெளிவாகப் படம்பிடித்துள்ளார். அரசுப் பேருந்துகளாக இருந்தாலும், தனியார் பேருந்துகளாக இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே நிறுத்துகிறார்கள். நகரங்களைவிட்டுத் தள்ளி இந்த உணவகங்கள் இருப்பதால், வேறு உணவகங்களைத் தேடிச் செல்ல முடியாத நிலை. தரம், சுவை, சுகாதாரம் இவை எதையும் எதிர்பார்க்காமல் மிக அதிக விலைகொடுத்துச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தைப் பயணிகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். மாநில அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்களூம், பொது சுகாதாரத் துறை அலுவலர்களும் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
- நா.புகழேந்தி, பழனி .
கேடலோனியாவும் இந்தியாவும்!
தி
ங்களன்று வெளியான ‘வணிகவீதி’ இணைப்பிதழில் ‘கேடலோனியா தனி நாடு சாத்தியமா?’ கட்டுரை, பிரிவின் காரணமாக எழக்கூடிய பொருளாதார விளைவுகளைத் துல்லியமாக அலசியிருந்தது. அதேசமயம், கேடலோனியா - ஸ்பெயின் விஷயத்தை அப்படியே இந்தியா மற்றும் அதன் மாநில உரிமைகளோடும் பொருத்திப் பார்க்க முடிகிறது. அதாவது, கூட்டாட்சி என்ற தத்துவத்தை மட்டும் மத்திய அரசு பேருக்கு உயர்த்திப் பிடித்துவிட்டு, மாநிலங்களின் சுயாட்சி உரிமையை மெள்ள மெள்ள பறிப்பதைப் போன்ற நடவடிக்கைதான் கேடலோனியாவில் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் தற்போது மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் நம் மாநில அரசுகளை கேடலோனியா போல புரட்சிக் குரல் எழுப்பும் நிலைக்குத் தள்ளக் கூடும்.
- கே.ஜான் பிரிட்டோ, நாகப்பட்டினம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago