இப்படிக்கு இவர்கள்: பயிற்சி மையங்களுக்கும் விதிமுறைகள் அவசியம்

By செய்திப்பிரிவு

பயிற்சி மையங்களுக்கும் விதிமுறைகள் அவசியம்

ரு தொடக்கப் பள்ளி தொடங்குவதற்கும்கூட பல நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாமல் பள்ளியைத் தொடங்குபவர்கள் தண்டனைக்கு ஆளாக வேண்டும். ஆனால் ஒரு பயிற்சி மையம் இயங்க இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை என்பது முரணாக இருக்கிறது. பயிற்சி மையம் தொடங்க எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை. பயிற்சி அளிப்போர்க்கு எந்தத் தகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் காரணமாக புற்றீசல் போல பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுவருகின்றன. கழிப்பறைகூட இல்லாத கட்டிடங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. கட்டணங்களுக்கும் எவ்வித வரையறையும் இல்லை. இப்பயிற்சி மையங்களுக்கு விதிமுறைகள் வகுப்பது அவசியம். அப்பாவி மாணவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க இவ்விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை-93

கற்றுக்கொள்வோம் ஜப்பானிடம்…

ஜப்பானில் ரயில் சேவை 20 நொடிகள் முந்தியதற்காக நிர்வாகம் வருத்தம் தெரிவித்து விளக்கம் தந்தது என்ற செய்தி (நவம்.18) ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நமது நாட்டிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இணையம் வேலை செய்யவில்லை என்ற தகவலை அடிக்கடி கேட்க வேண்டியிருக்கிறது. தூய்மை இந்தியா என்கிறார்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்கூட குப்பைகள் குவிந்துகிடக்கின்றன.(‘தி இந்து’வில் வெளிவந்த கொசுப்புழு ஒழிப்பு புகைப்படங்களே சாட்சி). மழைக் காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், குடை பிடித்த நிலையில் வாகனத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்தைத் தவிர, எப்போது வேண்டுமானாலும் வருகின்றன. விபத்தில் இறந்தவருக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை வழங்காமல் அரசு வாகனத்தை ‘ஜப்தி’ செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும் அநியாயம் இங்குதான் உண்டு. எந்தவொரு அரசுக்கும் சேவை குறைபாட்டுக்காகத் தனது மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று ஜப்பான் நமக்குப் பாடம் கற்றுக்கொடுக்கிறது.

- கலீல், சென்னை.

நியாயமான கவலை

எழுத்தாளர் குமார செல்வா எழுதிய நூல்களில் கவனிப்பை ஏற்படுத்தியது ‘குன்னிமுத்து’. அது ஆமாரிகள் என்று அழைக்கப்படும் பருவமடையாத பெண்கள் தொடர்பானது. நான் அறிந்தவரை, இப்பொருளில் தமிழில் வந்துள்ள ஒரே நாவல் அதுதான். அவருடனான நேர்காணல் (நவ.18) மகிழ்ச்சி அளிக்கிறது. நேர்காணல், இன்னும் விரிவாக இருந்திருக்கலாம். கல்லூரிப் பேராசிரியர்களிடம் வாசிப்புப் பழக்கம் இல்லை என்று அவர் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது.

- பொன் . குமார், சேலம்-6.

அரைச் சம்பளத்தில் திருமணம்

இணையகளம் பகுதியில் இசை இன்பன், தனது சுயமரியாதைத் திருமண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது (நவம்.17) சிறப்புக்குரியது. அரை மாதச் சம்பளத்துக்கு மிகாமல் திருமணச் செலவு மேற்கொள்ள வேண்டும் என்று பெரியார் சொன்ன ஆலோசனை தொலைநோக்குப் பார்வை உடையது. அவர் கூறியதைக் கடைப்பிடித்திருந்தால் பலருக்கு, திருமணச் செலவுகளால் கடனாளியாகும் நிலை ஏற்பட்டிருக்காது. அண்மையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் அறிவிக்கப்பட்டதுபோல, சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்வோருக்குக் தமிழகத்திலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

- சேகரன், பெரணமல்லூர்.

திரும்பிவரும் நினைவலைகள்

பல ஆண்டுகளுக்கு முன், கல்லூரிக் காலங்களில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் வரலாற்றுக் காவியங்களை நாட்கணக்கில் பசியறியாமல் படித்து வேறு ஒரு கற்பனை உலகுக்கே சென்றுவிடுவோம். வாழ்க்கை ஓட்டத்தில் அப்படிப்பட்ட கதைகளைத் திரும்பப் படிக்கவும், அதை மீண்டும் அசைபோடவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ‘தி இந்து’வில் வெளிவரும் ‘பார்த்திபன் கனவு’ தொடர்கதையும், ஓவியங்களும் மீண்டும் என்னை பழைய நினைவுகளில் ஆழ்த்திவிட்டன. 'தி இந்து 'வுக்கு நன்றி.

- ந. குமார், திருவாரூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்