இப்படிக்கு இவர்கள்: புதுமைகளின் முகவரி பாரதியார்!

By செய்திப்பிரிவு

சன கவிதை, சிறுகதை, கேலிச்சித்திரம், கலைச் சொல்லாக்கம் எனும் பொருண்மைகளைத் தமிழிலக்கியத்தில் முதன்முதலில் அறிமுகம் செய்துவைத்தவர் பாரதி. இலக்கியத்தில் மட்டுமின்றி காந்தி, குரு கோவிந்தர், தாதாபாய் நவுரோஜி, லோகமான்ய பால கங்காதர திலகர், லாலா லஜபதிராய், அபேதா நந்தா ஸ்வாமிகள், ஓவியர் இரவிவர்மா, ஸ்ரீசுப்பராம தீஷிதர், வேல்ஸ் இளவரசர், தாயுமானவர், வ.உ.சி. உ.வே.சா, ஔவையார், அன்னிபெசன்ட் அம்மையார், சீனத்துப் பெண் சியூ-சீன், சகோதரி நிவேதிதா தேவி, வங்கப் பெண் சரளாதேவி, பண்டிதை அசலாம்பிகை, விக்டோரியா மகாராணி, சி.என். முத்துலட்சுமி முதலிய தனிமனித ஆளுமைகளையும், இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா, பிஜி தீவு ஆகிய நாடுகளையும் தம் படைப்புகளின் வாயிலாக அறிமுகப்படுத்தியவர் அவர்.

அவரைப் பற்றி ‘விட்மன் எனும் பெருங்கவியைத் தமிழுக்கு பாரதி அறிமுகப்படுத்திய நூற்றாண்டு’ (நவ. 21) எனும் கட்டுரையை எழுதிய ய.மணிகண்டன் பாராட்டுக்குரியவர். ஏனெனில் பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், சீனி.விசுவநாதன் போன்ற பாரதி ஆர்வலர்களைப் போல் சமகாலத்தில் பாரதியின் அறியப்படாத வாழ்க்கையினைத் தேடிப்பிடித்து ஆவணப்படுத்தி வருபவர். இன்னும்கூட, பாரதியார் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையிடம் அடிபட்டு இறந்தார் என்ற பொய்யுரையை.. படித்தவர்களே நம்பிக்கொண்டிருக்கும்போது, பாரதியே எழுதி வெளியிட்டிருந்த ‘கோயில் யானை’ என்னும் நாடகத்தைத் தேடிப்பிடித்து உலகுக்கு உண்மையை வெளிச்சப்படுத்தியவர் அவர்.

- யாழினி அறிவரசன், தஞ்சாவூர்.

இளம் விஞ்ஞானிகள்

இன்ஃப்ரா ரெட் சென்சார் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு, ஆயில் சேவர் என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் முத்து ஐஸ்வர்யா, கோமதி, சாகித்ய நிருபன் ஆகியோர். இதன் மூலம், மனித சமுதாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் உதவிசெய்திருக்கிறார்கள்.. பாராட்டுகள்!

- கே.கே.பி.வி.புலவன், மின்னஞ்சல் வழியாக.

அடிப்படைத் தவறுகளே காரணம்!

எல்லா தவறுகளுக்கும் முதல் காரணம் தயாரிப்புச் செலவுகள். பின், நடிக நடிகையரின் அபரிமிதமான ஊதியம். விளம்பரச் செலவுகள். ஃபர்ஸ்ட் லுக், டீசர், மோஷன் போஸ்டர், ஆடியோ லான்ச், (First look, Teaser, Motion Poster, Audio launch) என அகலக்கால், பேராசை, சமூகப் பொறுப்பின்மை என ஏராளம். இதில் உச்ச நட்சத்திரங்கள் பாதிக்கப்படுவதில்லை. அவர்களை மற்றும் அவர்களைப் போன்ற அடுத்தகட்ட நடிகர்களின் கால்ஷீட்டை மட்டும் வைத்துக்கொண்டு, கதையில்லாமல் - பொறுப்பில்லாமல் கடன் வாங்கிப் படம் எடுத்து, இறுதியில் லாபம் பார்க்க முடியாமல் இப்படி ஒரு நிலை. அடிப்படைத் தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால், இது ஒரு தொடர்கதைதான்.

கொடுமை என்னவென்றால், நடிகர்கள் சம்பளத்தை வாங்கிவிட்டு தப்பித்துக் கை கழுவிவிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை உத்தமர்கள் என்று கூறவில்லை. சமூகப் பொறுப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தீர்வு சாத்தியமே!

- ரவி, மின்னஞ்சல் வழியாக…

மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

காந்திக்கு முன் எத்தனை தலைவர்கள் சுதந்திரத்துக்காகப் போராடினர், முதல் சுதந்திரப் போராட்டம் எங்கு நடந்தது, எவரால் நடத்தப்பட்டது என்பதெல்லாம் தொடரும் விவாதமாகவே இருக்கிறது. அவரவர் இடத்தை.. அவரவர் இனத்தை முன்னிறுத்தி இதுதான் முதல் சுதந்திரப் போராட்டம் என்கின்றனர். ஆர்.ஷபிமுன்னாவின் ‘தமிழ்நாட்டின் கிளர்ச்சிகள் சுதந்திர இந்தியாவுக்கானவை இல்லையா?’ எனும் கட்டுரையில் முதல் சுதந்திரப் போராட்டம் எது, எங்கு நடந்தது, எவரால் நடத்தப்பட்டது என ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழு நியமிக்க வேண்டும் என்றது வரவேற்புக்குரியது. மத்திய அரசு உடனடியாகக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொன்.குமார், சேலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்