குழந்தைகள் பேச வேண்டும்!
அ
க். 2 அன்று வெளியான ‘காது உட்பதியக் கருவி: நல்ல திட்டம் வீணாகலாமா?’ கட்டுரை வாசித்தேன். பல அரசு மருத்துவமனைகளில் பேச்சு மற்றும் செவி திறன் மருத்துவர்கள் குறைவு. தனியார் மருத்துவமனைகளில் ஏழை மக்கள் செல்ல முடியாத வகையில் மாதம் ரூ.8,000 வரை வசூலிக்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் 5 முதல் 10 வயது குழந்தைகளுக்கு முறையாகப் பயிற்சி அளிக்காமல் முக்கியப் பயிற்சிக் காலம் வீணாகிறது. பல குழந்தைகளின் எதிர்காலமே இதன் மூலம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. நிலைமையைப் புரிந்துகொண்டு கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டியது அரசின் கடமை. மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த வேண்டியதும் அவசியம்.
- இப்ராகிம் சைபானி, திருநெல்வேலி.
அரசியலும் இளைஞர்களும்
அ
க்.3 அன்று வெளியான ‘அமெரிக்க இளைஞர்களின் அரசியல் ஆர்வம்’ கட்டுரை இன்றைய சூழலில் மிக முக்கியமான பதிவு. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக, தன்னலம் பாராமல் பொது நலத்தோடு செயல்பட வேண்டிய ஒன்று என்றே நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர். ஆனால், கோடீசுவரனாகலாம், கொள்ளையடிக்கலாம் என்ற நினைப்புடன் அரசியலுக்கு வருபவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்படி நன்மை விளையும்? உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா இன்று டிரம்ப் மூலம் சந்தித்து வரும் இன்னல்களுக்கு யார் பொறுப்பு? இளைய தலைமுறையினர் அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்ததன் விளைவுதானே இதெல்லாம்? இந்நிலையில் தஷீன் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம். நம் நாட்டிலும் இந்தக் கலாச்சாரம் உருவாக வேண்டும்.
- கூத்தப்பாடி பழனி, தருமபுரி
பாஜக எப்படி மாறும்?
அ
க்.3 அன்று வெளியான ‘எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?’ கட்டுரை படித்தேன். கட்டுரை நெடுகிலும் சரியான விளக்கங்களைத் தந்துவிட்டு முடிவில் கடைசி யில் முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார் கட்டுரையாளர். இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்தைக் காப்பதற்காகவும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியது அவசியம்தான். ஆனால் மாற்று ஆலோசனையாக காங்கிரஸைப்போல பாஜக மாற வேண்டும் என்று கட்டுரையாளர் விரும்புவது முரணாகத் தெரிகிறது. நகைப்புக்குரியது. ஏனெனில் அவரே குறிப்பிட்டுள்ளதுபோல பாஜக இந்துத்துவா கொள்கையை வரித்துக்கொண்டதோடு அதை வேகமாக நடைமுறைப்படுத்திவரும் கட்சி. அப்படியிருக்க, அந்தக் கட்சி தனது நிலைப்பாட்டை எப்படி மாற்றிக் கொள்ளும்?
- பெரணமல்லூர் சேகரன் , மின்னஞ்சல் வழியாக..
எப்போது லோக்பால்?
ஊ
ழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே தலைமையில் இன்றைய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இன்றைய புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி உட்பட லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தார்கள். போராட்டத்துக்கு மக்களிடையே பெருத்த ஆதரவு கிடைத்ததையடுத்து பணிந்த காங்கிரஸ் அரசு, லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என அப்போதைக்கு உறுதி அளித்தது. இதையடுத்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். எனினும் லோக்பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜகவினர் உறுதியளித்தார்கள். ஒருவகையில் அண்ணா ஹசாரேயின் போராட்டம், பாஜக ஆட்சி அமைந்திட ஒரு அடித்தளமாகவே அமைந்தது என்றால் அது மிகையாகாது. பலமுறை பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் வலியுறுத்தியும் லோக்பால் பாஜகவும் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் வரை காத்திருந்தும் எதுவும் நடக்காததால் மீண்டும் போராடப்போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆளும் பாஜக தனது தவறைத் திருத்திக்கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்பாகவே இது தோன்றுகிறது.
- அ. அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago