இப்படிக்கு இவர்கள்: பாதுகாக்க வேண்டிய காலப்பெட்டகம்

By செய்திப்பிரிவு

பாதுகாக்க வேண்டிய காலப்பெட்டகம்

தே

டலும் தீவிரமும் கொண்ட ‘தி இந்து’ வாசகர்களுக்கு வழக்கம்போல மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிக்கும்வகையிலேயே இந்த ஆண்டு தீபாவளி மலரும் அமைந்திருக்கிறது. கலை, இலக்கிய ரசனைகள் பற்றிய கட்டுரைகளும் வாழ்வியல் சித்திரங்களும் இந்த மலரை போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த உதவும் காலப்பெட்டகமாக மாற்றியுள்ளது. பொருநை நால்வரைப் பற்றிய விரிவான அறிமுகமும், தமிழின் முன்னோடி நவீன எழுத்தாளர்கள் மொழிபெயர்த்த பிறமொழிச் சிறுகதைகளும் இந்த ஆண்டு தீபாவளி மலரை இலக்கிய மலராகவும் மாற்றியிருக்கின்றன. தாழ்வாரம், பல்லாங்குழி, சுருக்குப்பை, மரப்பாச்சி பொம்மை என்று கால மாற்றத்தால் நாம் இழந்துவரும் கலாச்சார அம்சங்களைப் பற்றி ஒரு பக்கக் கட்டுரைகள் இந்த மலரின் தனிச்சிறப்பு. வாழ்வின் இனிய தருணங்களை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

-அ.சாமித்துரை, ஒரத்தநாடு.

எது சிறப்புப் பேருந்து?

தீ

பாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இருப்பினும், இவ்வாறு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பிற வழித்தடங்களில் இயக்கப்பட்டவை. குறிப்பாக கிராமப்புறங்கள் வழியாக பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளை நிறுத்தி, சென்னைக்கு இயக்குகிறார்கள். இதனால் சென்னை தவிர பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் பாதிப்படைகிறார்கள். எனவே, உள்ளூர் பயணிகள் பாதிக்காத வண்ணம் சிறப்புப் பேருந்துகளை இயக்கினால் அனைவருக்கும் பலன் கிட்டும்.

-எம்.ஆர்.லட்சுமிநாராயணன்,

தாத்தையங்கார்ப்பட்டி, நாமக்கல்.

டெங்கு ஒழிப்பா, ஊக்குவிப்பா?

டெ

ங்கு காய்ச்சல் தடுப்புக்காக அமைச்சர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனத்தினர் என பலரும் ஆங்காங்கே நிலவேம்புக் குடிநீர் வழங்கி வருகிறார்கள். நிலவேம்புக் குடிநீர் காகித, பிளாஸ்டிக் தம்ளர்களில் வழங்கப்படுவதால் பொதுமக்கள் அதை அருந்திவிட்டு குப்பைகளை அவ்விடத்திலேயே போட்டுச்செல்கின்றனர். டெங்கு கொசுவின் இயல்பே இந்த மாதிரி தம்ளர்களில் தேங்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதே. ஆங்காங்கே வீசியெறியப்படும் தம்ளர்களில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசுவிற்கு கொண்டாட்டமாகிவிடும். எனவே நிலவேம்பு குடிநீர் வழங்குபவர்கள், உபயோகப்படுத்திய குப்பைகளை முறையாக சேகரம் செய்து அகற்ற வேண்டும். இல்லையேல் இவர்களே டெங்கு பரவலுக்கு வழிவகுத்த மாதிரி ஆகிவிடும்.

-ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

திருத்தம்

க். 10 அன்று வெளிவந்த ‘சே குவேரா: இறந்த அன்று பிறந்தவர்’ கட்டுரையில், அவர் புதைக்கப்பட்டாரா எரிக்கப்பட்டாரா என்பது சிஐஏவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம் என்று கூறப்பட்டுள்ளது. சேகுவேரா மற்றும் அவரது சகாக்களின் உடலை ஒரு இரவில் மத்திய பொலியாவில் உள்ள வால்லெக்ரண்டெ நகரத்துக்கு அருகில் புதைத்ததாக 1995 ஜூலை 1-ல் அதை நேரில் கண்ட பொலிவிய ராணுவத் தளபதி ஒரு நேர்காணலில் கூறினார். அந்தத் தகவலின் அடிப்படையில் நடந்த தேடலில் அவரது உடல் ஐந்து நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்ட இடத்தில் கிடைத்த ஒரு எலும்புக்கூட்டுக்கு இரு கைகளும் இல்லாததை வைத்து அது சேகுவாராவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலின் மிச்சங்கள் 1997-ல் கியூபாவுக்குச் கொண்டுசெல்லப்பட்டு சாண்டா கிளாரா நகரில் மீண்டும் புதைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஃபிடல் காஸ்ட்ரோவும் கலந்துகொண்டார். தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்