மாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை

By செய்திப்பிரிவு

கரோனா எதிர்கொள்ளல் நடவடிக்கையால் மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிற நிலையில், ‘கரோனா எதிர்கொள்ளல் சிறப்பு நிதி’ என்ற பிரத்யேக நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு என்று இந்திய அரசு அளிக்க வேண்டும்.

கரோனாவை எதிர்கொள்ளும் செலவுகளும், ஊரடங்கு உண்டாக்கியிருக்கும் பொருளாதாரத் தேக்கமும் சேர்த்து மாநில அரசுகளின் வரி வருவாயை ஏறக்குறைய துடைத்தெறிந்துவிட்டன. தமிழ்நாட்டில் வழக்கமாக மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 கோடி வரி வருவாய் கிடைக்கும். தன்னுடைய செலவுகளில் ஏறக்குறைய 60% நிதியாதாரத்தை இந்த வரிகளிலிருந்தே உருவாக்கிக்கொள்ளும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், ஊரடங்கு காரணமாக வழக்கமான வரி வருவாயில் 10% கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியம் ரூ.12,000 கோடி; ஆனால், ஏப்ரலில் மாநில அரசின் மொத்த வருமானம் ரூ.2,284 கோடியாகச் சுருங்கிவிட்டது. கட்சி பேதமின்றி எல்லா மாநிலங்களுமே ஒன்றிய அரசின் மானியங்களுக்காகக் கையேந்தி நிற்கின்றன.

பொதுவான சராசரிக் கணக்கீடுகளின்படி, மாநிலங்களின் நிதியாதாரங்களில் நேரடி வரிகளிலிருந்து அவை பெறுகிற வரி வருவாய் 46% மட்டுமே; எஞ்சிய 54% தொகை ஒன்றிய அரசிடமிருந்து வரும் வரிப் பகிர்வு 26%, மானியங்கள் 20%, வரியல்லாத வருவாய் 8% என்று பிரிகின்றன. வரி அதிகாரத்தில் ஒன்றிய அரசின் கைகளே ஓங்கியிருக்கும் நிலையில், மாநிலங்களுக்கான வாய்ப்புகள் ஏற்கெனவே குறைவு; ஜிஎஸ்டிக்குப் பிந்தைய காலகட்டம் மாநிலங்களின் வரி சுதந்திரத்தை மேலும் சுருக்கிவிட்டது. இன்றைக்கு மாநிலங்களுக்கு உள்ள வரி வருவாயில், முக்கியமான ஒரு பகுதி பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மது விற்பனையின் வழி கிடைக்கிறது. விளைவாகவே, இந்த இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசலுக்கான வரிகளை உயர்த்தி, மதுக் கடைகளைத் திறக்கும் மோசமான நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

மாநிலங்களின் நிதி நெருக்கடியைப் போக்க ஒரு சிறப்பு நிதியை ஒதுக்குவதுடன், ‘பட்ஜெட் பற்றாக்குறைக்கான உச்ச வரம்பை 3% என்பதிலிருந்து 5% ஆக உயர்த்த வேண்டும்’ என்ற மாநிலங்களின் கோரிக்கைக்கும் ஒன்றிய அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். ஏனைய பல கூட்டாட்சி நாடுகளில் உள்ளதுபோல மாநிலங்களுக்கான வரிப் பகிர்வும் வரி விதிப்பு அதிகாரமும் இந்தியாவில் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்