பெண்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது, பெண்களின் பணியிடப் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தக் கொலை தொடர்பாக மருத்துவமனை வளாகத்துக்குள் செயல்படும் காவல் நிலையத்தில் தன்னார்வலராக இருக்கும் சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சஞ்சய் ராயின் அரசியல் பின்னணியும் மருத்துவமனையில் அவருக்கு இருக்கும் செல்வாக்கும் கொலை தொடர்பான வேறு பல சந்தேகங்களை எழுப்புவதால், கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கேட்டும் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை வலியுறுத்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இந்த வழக்கைத் திரிணமூல் காங்கிரஸ் அரசு கையாளும் விதம் குறித்து, மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE