போரில் குழந்தைகள் கொல்லப்படும் அவலம் முற்றுப்பெற வேண்டும்!

By செய்திப்பிரிவு

உக்ரைனில், குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட இடங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிகழ்வு, உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயாளிகள் ஆகியோர் போரில் தாக்கப்படக் கூடாது என்கிற அடிப்படை மனிதநேய நெறியை ரஷ்யா மீறியிருப்பதாகக் கண்டனக் குரல்கள் ஒலித்துவருகின்றன.

சர்வதேசச் சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்கிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் உள்ள ஓக்மாடிட் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்டவை மீது ஜூலை 5 அன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் வழக்கமான நடவடிக்கை அல்ல என்று கருதப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு உக்ரைனை நிலைகுலைய வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ரஷ்யா இத்தாக்குதலைத் திட்டமிட்டிருப்பதாகப் பன்னாட்டு உறவுத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE