வெப்ப அலை: நீண்டகாலச் செயல்திட்டங்கள் தேவை

By செய்திப்பிரிவு

2024ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் ‘வழக்கத்துக்கு மாறாக’ அதிக நாள்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் எச்சரிக்கை கவலை அளிக்கிறது. கோடைக்காலம் முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தென் மாநிலங்கள் எதிர்கொண்டிருக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை, உயர்ந்துவரும் உணவுப் பொருள் பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில், வெப்ப அலை குறித்த இதுபோன்ற அறிவிப்புகள் மக்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளன.

ஓரிடத்தில் வழக்கத்தைவிட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமான அல்லது 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் நீடிக்கும் சூழல் ‘வெப்ப அலை’ என வரையறுக்கப்படுகிறது. 2022இல், இந்தியாவில் 16 மாநிலங்களில் 280 நாள்கள் வெப்ப அலை நிலவியதாக டெல்லி அறிவியல்–சுற்றுச்சூழலுக்கான மையத்தின் அறிக்கை கூறுகிறது. நீரிழப்பு, தலைச்சுற்றல், சோர்வு, வெப்ப மயக்கம் (heat stroke) போன்ற பாதிப்புகளை மனிதர்களிடம் வெப்ப அலை ஏற்படுத்துகிறது; கடுமையான வெப்ப அலைகளால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்தியாவில் வெப்ப அலைகளால் 2023இல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE