ரஷ்ய அதிபர் தேர்தல்: சர்வாதிகாரத்தின் செல்வாக்கு

By செய்திப்பிரிவு

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் ஐந்தாவது முறையாக அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விளாடிமிர் புடின். மார்ச் 18 அன்று வெளியான தேர்தல் முடிவுகள், உக்ரைன் போர் விஷயத்தில் புடினுக்கு ரஷ்ய மக்களின் பெருவாரியான ஆதரவு இருப்பதாக, அவர் பெருமையுடன் பறைசாற்றிக்கொள்ளவே வழிவகுத்திருக்கிறது. அதேவேளையில், முழுக்க முழுக்க புடின் அரசின் கட்டுப்பாட்டிலேயே நடத்தப்பட்ட இந்தத் தேர்தல், ரஷ்யாவில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்தத் தேர்தலில், ரஷ்ய அரசின் தலைமைப் பீடமான கிரெம்ளின் அனுமதித்த வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டார்கள். அரசின் கொள்கைகளை விமர்சித்தவர்கள், பல்வேறு காரணங்களின் பேரில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கப்பட்டனர். முன்னதாக, தேர்தலை ஒட்டி உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை விமர்சிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE