சூரிய மின்சக்தித் திட்டம்: வரவேற்கத்தக்க முன்னெடுப்பு!

By செய்திப்பிரிவு

இந்தியாவின் மின் நுகர்வு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி சூர்யோதய் யோஜனா’ திட்டம் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. மக்கள்தொகையில் சீனாவை விஞ்சியிருக்கும் நிலையில், இந்திய நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகளையும் உறுதிசெய்யும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில், எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.

ஏழை-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு கோடி குடும்பங்களுக்கு சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக வீட்டின் மேற்கூரையில் சூரிய சக்திப் பலகைகளைப் பொருத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ஏழை-நடுத்தர வர்க்க மக்களின் மின் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆற்றல் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE