மகாராஷ்டிரம்: கட்சித் தாவலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியே உண்மையான சிவசேனா கட்சி என்று அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகர் பிறப்பித்திருக்கும் உத்தரவு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நோக்கத்தைக் கேள்விக்குறி ஆக்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மகாராஷ்டிரத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி 2022இல் கவிழ்ந்தது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த 38 எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் திரண்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றினர். சிவசேனாவின் கட்சி, கொடி, சின்னத்துக்கு ஷிண்டே - தாக்கரே என இரண்டு அணியினரும் உரிமை கோரி வந்தனர். ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடா, ஷிண்டே உள்பட 39 எம்எல்ஏ-க்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்த் தகுதிநீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகருக்குக் கடிதம் அனுப்பினார். இதேபோல தாக்கரேவை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஷிண்டே அணியினர் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க நார்வேகருக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE