தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நியாயமற்ற பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்ட அன்றைய தென் மண்டல ஐ.ஜி.சைலேஷ்குமார் யாதவுக்குத் தமிழ்நாடு அரசு டிஜிபியாகப் பதவி உயர்வு வழங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, 2018இல் உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அன்றைய அதிமுக அரசு அமைத்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், 2022 மே மாதம் ஆணையம் தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடங்கி, துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுவரை பல பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. அந்தப் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்கிற புகார் எழுந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE