உச்ச நீதிமன்றத்தின் கையேடு: மாற்றத்துக்கான உத்தரவாதம்

By செய்திப்பிரிவு

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் அறிவித்தாலும், சட்டத் துறையில் பயன்பாட்டில் இருக்கும் சொற்கள் சில பாலினப் பாகுபாட்டையும் பாலினரீதியான அடையாளப்படுத்துதலையும் கொண்டிருக்கின்றன. அவற்றைக் களையும்விதமாக, பாலினரீதியான அடையாளப்படுத்துதல் அல்லது முத்திரை குத்துதலை எதிர்கொள்ளும் வகையிலான கையேட்டை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது; இது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்பும்கூட.

உச்ச நீதிமன்றம் போன்ற அதிகாரம் பொருந்திய அமைப்பு, ஒரு விஷயத்தைத் திட்டவட்டமாக வரையறுக்கிறபோது, அது சமூகத்தில் ஆக்கபூர்வ மாற்றத்துக்கு வழிவகுக்கும். பொதுவாக நாடு, மொழி, சாதி, மதம், நிறம், பாலினம் சார்ந்து குறிப்பிட்ட பிரிவினரையோ, அந்தப் பிரிவைச் சார்ந்த தனி மனிதர்களையோ முத்திரை குத்தும் பிற்போக்குத்தனம் உலகம் முழுவதும் நிலவிவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE