ட்ரோன் கண்ணீர்ப் புகைகுண்டு: போர்க் குற்றம் புரிகிறதா காவல் துறை?

By ச.பாலமுருகன்

கோவை மாநகரக் காவல் துறையினர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கண்ணீர்ப் புகைகுண்டு வீசும் ட்ரோன் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், அதற்காகக் காவல் துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள்’ வரிசையில் இந்த ட்ரோன் விரைவில் இணையப்போவதாகவும் தெரிகிறது. தமிழகம் போன்ற அமைதிப் பூங்காவில், அதுவும் கோவை போன்ற நகரில் எந்தத் தேவையின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது என்கிற தகவல் இல்லை.

இது போன்ற ஆயுதங்கள் காவல் துறையில் இடம்பெற மாநில அமைச்சரவையில் அல்லது சட்டமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெற்றதாகவும் தெரியவில்லை. பெரும் அமைதியின்மை நிகழும் மாநிலங்களில்கூட இது போன்ற சாதனங்களைப் பயன்படுத்த முடிவெடுக்கப்படாத நிலையில், இங்கே இது போன்ற முயற்சிகள் ஏன் எனும் கேள்வி எழுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE