சுதந்திரச் சுடர்கள் | விளையாட்டு: ஒலிம்பிக் நாயகி

By மிது

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண் என்கிற பெருமையை கர்ணம் மல்லேஸ்வரி படைத்தது, ஒரு வரலாற்றுச் சாதனை.

சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் பல வீராங்கனைகள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், பதக்கம் வென்றதில்லை என்கிற குறை இருந்துவந்தது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் 2000இல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான் இந்தக் குறை முடிவுக்குவந்தது.

அந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 44 வீரர்கள், 21 வீராங்கனைகள் என 65 பேர் பங்கேற்றார்கள். பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் சோபிக்காமல் போனார்கள். ஆனால், முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆந்திரத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, வெண்கலப் பதக்கம் வென்று, சிட்னி ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பெறக் காரணமாக இருந்தார்.

மகளிருக்கான பளுதூக்குதல் 69 கிலோ பிரிவில் பங்கேற்ற மல்லேஸ்வரி ‘ஸ்நாட்ச்’ பிரிவில் 110 கிலோவையும், ‘கிளீன் & ஜெர்க்’ பிரிவில் 130 கிலோவையும் தூக்கி வெற்றியை வசப்படுத்தினார். வெண்கலப் பதக்கத்தைப் பெறுவதற்காக மல்லேஸ்வரி தலைகுனிந்தபோது, தேசம் தலை நிமிர்ந்தது. இந்த வெற்றியின் மூலம் தனிநபர் பிரிவில் முதன்முதலாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்கிற சிறப்பையும் மல்லேஸ்வரி பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்