இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் 14 வயதுவரை உள்ள அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிப்பதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசமைப்பின் கூறு 45இல் கூறப்பட்டுள்ளது.
இதற்கான பயணத்தில் 2002இல் அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட 86ஆம் திருத்தம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக இந்திய அரசமைப்பின்படி 6 வயது முதல் 14 வயதிலான குழந்தைகளுக்குக் கல்வி என்பது அடிப்படை உரிமை ஆக்கப்பட்டது. அதே நேரம் இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் 86ஆம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி 2005இல் கல்வி உரிமைச் சட்டத்துக்கான வரைவு தயாரிக்கப் பட்டது. இதையடுத்து கல்வி உரிமைச் சட்டம் என்றழைக்கப்படும் இலவச - கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவேறியது.
இந்தச் சட்டம் 6 முதல் 14 வயதுவரையிலான குழந்தைகள் பள்ளியில் இல்லாமல் இருந்தால், அவர்கள் வயதுக்குரிய வகுப்பில் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கு வழிவகை செய்தது. மேலும் இந்த வயதுப் பிரிவினர் இலவசமாக கட்டாயக் கல்வி பெறுவதை உறுதிசெய்வதற்கு மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆகியோரின் கடமைகளும் பொறுப்புகளும் இந்தச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
» திமுக முப்பெரும் விழா: விருதுகள் அறிவிப்பு: டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது
» தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 396 ஆசிரியர்கள் தேர்வு
இந்தச் சட்டத்தின் மூலம் 6 முதல் 14 வயதுவரையிலான குழந்தைகள் தமது அருகமைப் பள்ளிகளில் சேர்க்கப்படுவதையும் அவர்கள் வயதுக்குரிய கல்வியை நிறைவுசெய்வதையும் உறுதிப்படுத்துவது அரசின் கடமையானது. அரசுப் பள்ளிகளில் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணமோ பிற கட்டணங்களோ வசூலிக்கப்படக் கூடாது.
கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் எந்தக் குழந்தையும் கல்வியை இழந்துவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதும் அரசின் கடமை. எனவே, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களைப் பொருளாதாரரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்திவிடும். சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த 25% ஒதுக்கீடு விதி பொருந்தாது என்று 2014இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரசமைப்புச் சட்டத்தின்படி கல்வியை அடிப்படை உரிமையாக ஆக்கி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பிறகும் இந்தியக் குழந்தைகள் அனைவரும் தமது வயதுக்குரிய கல்வியைப் பெற்றிருப்பது இன்னும் முழுமையாக உறுதிசெய்யப்படவில்லை.
- நந்தன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago