ராவ் பகதூர் சர் வாங்கல் திருவேங்கடாச்சாரி கிருஷ்ணமாச்சாரி (வி.டி. கிருஷ்ண மாச்சாரி), முதல் ஐந்தாண்டு திட்டக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். 1961 முதல் 1964 வரையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வகித்தார்.
அந்நாளைய சேலம் மாவட்டத்தின் வாங்கல் என்கிற கிராமத்தில் பிறந்தவர். ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். தற்போது குஜராத்தில் அமைந்துள்ள அன்றைய பரோடா சமஸ்தானத்தின் திவானாக 1927 முதல் 1944 வரையில் பணியாற்றினார். இந்தியாவில் நீண்ட காலம் திவானாகப் பதவிவகித்தவர் இவர். பரோடா திவானாக இருந்தபோது அந்த சமஸ்தானத்தின் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிக்காகப் பெரிய திட்டமொன்றை அமல்படுத்தினார்.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் சமஸ்தானப் பகுதியின் பிரதம அமைச்சராக 1946 முதல் 1949 வரையில் பதவி வகித்தார். லண்டனில் நடந்த மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் பங்கேற்ற அவர், 1934 முதல் 1936 வரையில் லீக் ஆஃப் நேஷன்ஸ் பேரவைக்குப் பிரதிநிதியாகவும் சென்றிருக்கிறார். இந்திய ஒன்றியத்துடன்தான் இந்தியாவின் பெரிய சமஸ்தானங்கள் சேர வேண்டும் என்பதை ஆதரித்தார்.
அரசமைப்பை உருவாக்குவதற்கான அவையில் ஜெய்ப்பூர் பிரதநிதியாக அவர் பங்கேற்றார். பிறகு அந்த அவையின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த சேவைக்காக பிரிட்டிஷ் அரசின் விருதுகளைப் பெற்றுள்ள அவரைச் சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசும் பயன்படுத்திக் கொண்டது.
» திருமதி செல்வம் முதல் வாணி ராணி வரை: தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் 2009 - 2013 பட்டியல்
கிருஷ்ணமாச்சாரியின் மகனான வி.கே. திருவேங்கடாச்சாரி (1904-1984) மதராஸ் மாகாண அட்வகேட் ஜெனரலாக 1951 முதல் 1964 வரையில் பதவி வகித்தார். அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணை உருவாக்கப்பட்டது.
- சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago