சுதந்திரச் சுடர்கள் | திரையுலகம்: உலகம் சுற்றிய தமிழர்

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் முழுநீள ஆவணப்படத்தை முதலில் உருவாக்கியவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.

தனது ஆவணப்படத்துக்காக இரண்டரை ஆண்டுகள், கப்பல் , விமானம் என ஒரு லட்சம் மைல்கள் உலகின் பல நாடுகளுக்குச் சுற்றித் திரிந்தார்.

1910 தொடங்கி 1940 வரை 30 ஆண்டுகள் காந்தி சென்றுவந்த எந்த நாட்டையும் அவர் விட்டுவிடவில்லை. செல்லும் நாடுகளிலெல்லாம், காந்தியின் வருகையைப் படமாக்கிய சுயாதீன ஒளிப்பதிவுக் கலைஞர்கள், அரசு ஒளிப்பதிவாளர்கள் என நூறு பேரைச் சந்தித்து, 50 ஆயிரம் அடி காட்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்.

அதிலிருந்து காலவாரியாக 2 மணி நேரக் காட்சிகளைத் தொகுத்து, ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்கிற தலைப்பில் உருவாக்கிய ஆவணப்படத்தை 1940இல் தமிழில் வெளியிட்டபோது அவருக்கு 30 வயது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நிகழ்வு கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த ஆகஸ்ட் 15 அன்று இரவு, டெல்லியில் முதல் முறையாக ‘காந்தி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அதன் பின்னர், காந்தியின் படுகொலைக்குப் பிறகான அவரது இறுதிக் காலத்தையும் சேர்த்து முழுமைப்படுத்தி இந்தி விவரணையுடன் 1950இல் வெளியிட்டார். இதே படத்தை ஹாலிவுட் கலைஞர்களின் துணையுடன் ஆங்கிலத்திலும் வடித்தெடுத்து 1950இல் அமெரிக்காவில் திரையிட்டார்.

ஏ.கே.செட்டியார்

அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே.செட்டியார், காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் பிறந்து, இளமையில் பர்மாவில் வளர்ந்தவர். 14 வயது முதல் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதுவே இதழியல் துறைக்கு அவரை இழுத்துவந்தது.

பர்மாவிலிருந்து வெளிவந்த ‘தனவணிகன்’ மாத இதழின் ஆசியராகச் சில காலம் பணியாற்றியவர், பின்னர் தமிழகம் திரும்பியதும் ‘குமரி மலர்’ என்கிற தமிழ்ப் பண்பாட்டு மாத இதழைத் தொடங்கினார். சுமார் 40 ஆண்டு காலம் அதன் ஆசியராகவும் பதிப்பாளராகவும் பொறுப்பேற்று நடத்தினார்.

தமிழர் பண்பாட்டை ஆவணப்படுத்துவதை ஓர் இயக்கம் போல் செய்துவந்த ‘குமரி மலரி’ல், எழுதாத தமிழ் ஆளுமைகள் குறைவு. பாரதியின் மீது பெரும் பக்தி கொண்டிருந்த ஏ.கே.செட்டியார், பாரதியின் தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடியெடுத்துப் பதிப்பிக்கும் பணியில் முன்னணியில் நின்றார். உலகம் சுற்றிய தமிழரான அவர், தமிழ் இதழியலுக்கும் தமிழ் ஆவணப்படத் துறைக்கும் பெரும் வெளிச்சமாக விளங்கியவர்.

- ஜெயந்தன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

மேலும்