இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் அரசியல் அடக்குமுறையை எதிர்த்தவர் ஸ்நேகலதா ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் 1932இல் பிறந்த ஸ்நேகலதா, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார். ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இந்திய உடைகளை அணிந்தும் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டும் கல்லூரிக்குச் சென்றார்.
ஸ்நேகலதா - பட்டாபிராம் தம்பதி, சுதந்திரப் போராட்ட வீரர் ராம்மனோகர் லோகியாவின் செயல்பாடுகளால் கவரப்பட்டு அவரைப் பின்பற்றி போராட்டங்களில் ஈடுபட்டனர். 1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போது தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமானது ‘பரோடா டைனமைட் வழக்கு’. குற்றப்பத்திரிகையில் ஸ்நேகலதாவின் பெயர் இடம்பெறாதபோதும், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குழுவினரின் செயலுக்கு அவர் உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்பட்டு மிசா (Maintenance of Internal Security Act) சட்டத்தின்கீழ் ஸ்நேகலதா கைது செய்யப்பட்டார்.
1976 மே 2 அன்று கைதுசெய்யப்பட்டு, எந்த விசாரணையும் இன்றி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாள்பட்ட ஆஸ்துமா வால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை சிறையில் அனுபவித்த கொடுமைகளாலும் சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் மோசமடைந்தது. இருந்தபோதும் சிறைக் கைதிகளின் உரிமைக்காகப் போராடினார். சிறைக் கைதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுவதைக் கண்டித்தார். சிறையில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிறையில் இருந்தபோது அங்கே நடந்த வற்றைச் சிறு நாட்குறிப்பேட்டில் ஸ்நேகலதா பதிவுசெய்துவந்தார். அவரது டைரிக் குறிப்பு களைத் தொகுத்து கர்நாடக மனித உரிமைகள் ஆணையம் 1977இல் புத்தகமாக வெளியிட்டது. பெண்ணிய வரலாற்று ஆய்வாளரான உமா சக்ரவர்த்தி, ஸ்நேகலதாவின் அரசியல் செயல் பாடுகளையும் அவரது சிறை அனுபவங்களையும் மையமாக வைத்து, ‘Prison Diaries’ என்கிற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
» இபிஎஸ் குணாதிசயங்களைத்தான் கண்டிக்கிறேன்; அவருடன் விரோதம் இல்லை: டிடிவி தினகரன்
» விதிகளை மீறி ஆம்னி பேருந்துகள் இயக்கம்: உரிமையாளர்களிடம் ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிப்பு
ஸ்நேகலதாவின் உடல்நிலை மோசமடைந் ததையடுத்து எங்கே அவர் சிறையிலேயே இறந்துவிடுவாரோ என்று பயந்து 1977 ஜனவரி 15 அன்று பரோலில் வெளியே அனுப்பப்பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உடலும் மனமும் பாதிக்கபட்டிருந்தவர், வெளியே அனுப்பப்பட்ட ஐந்தாம் நாள் மரணமடைந்தார்.
- ப்ரதிமா
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago