ஜூலை 20:
செர்பியாவின் எல்லைப் பகுதியில் தமது படைகளை ஆஸ்திரியா ஹங்கேரி பேரரசு நிறுத்தியது.
ஜூலை 25:
படைகளை அணிதிரட்டுமாறு தளபதிகளுக்கு செர்பியா ஆணையிட்டது. ரஷ்யா ஆஸ்திரியா எல்லையில் படையினரை நிறுத்த ரஷ்யா ஏற்பாடு செய்தது.
ஜுலை 28:
செர்பியா மீது ஆஸ்திரியா ஹங்கேரி பேரரசு போர் அறிவித்தது.
ஜூலை 29:
தன்னால் நடுநிலை வகிக்க முடியாது என்று ஜெர்மனியிடம் பிரிட்டன் எச்சரித்தது. செர்பியத் தலைநகர் பெல்கிரேடில் ஆஸ்திரியப் படைகள் குண்டு மழை பொழிந்தன.
ஆகஸ்ட் 1:
படைகளை அணிதிரட்ட பிரான்ஸ் உத்தரவிட்டது. ரஷ்யா மீது ஜெர்மனி போர் அறிவித்தது. இத்தாலியும் பெல்ஜியமும் நடுநிலை வகிப்பதாக அறிவித்தன.
ஆகஸ்ட் 3:
பிரான்ஸ் மீது போர் அறிவித்தது ஜெர்மனி. படைகளை அணிதிரட்டுமாறு பிரிட்டன் உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 6:
பிரிட்டனின் போர்க் கப்பலான ஹெச்.எம்.எஸ். ஆம்பியன் கப்பலை, ஜெர்மன் கப்பல் படை வடக்குக் கடலில் மூழ்கடித்தது. 150 வீரர்கள் உயிரிழந்தனர். பிரிட்டன் தரப்பில் முதல் இழப்பு அது.
ஆகஸ்ட் 11:
“பிரிட்டன் பிரஜைகளே! உங்கள் நாட்டுக்கும் மன்னருக்கும் நீங்கள் தேவை” என்ற வாசகத்தை பிரிட்டன் அறிவித்தது. இரண்டே வாரத்தில் படையில் ஒரு லட்சம் பேர் சேர்ந்தனர்.
ஆகஸ்ட் 13:
‘ராயல் ஃபிளையிங் கார்ப்ஸ்' என்றழைக்கப்பட்ட பிரிட்டன் விமானப் படை பிரான்ஸைச் சென்றடைந்தது.
செப்டம்பர் 6:
பிரான்ஸின் மார்னே ஆற்றின் கரையில் நடந்த சண்டையில், பிரிட்டன் தரப்பில் 13,000 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் தரப்பில் 2.5 லட்சம் பேரும் ஜெர்மனி தரப்பில் 2.5 லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 16:
பிரிட்டிஷ் படையில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் மும்பையிலிருந்து புறப்பட்டு பாரசீக வளைகுடாவைச் சென்றடைந்தனர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago