வர்காஸ் வழி ஆட்சியாளர்கள்!

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் முழுக்க அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. வீடமைப்பு, சுற்றுப் புறச் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து ஆகியவற்றில் தங்களுக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக வெவ்வேறு தரப்பினர் இந்தக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

எந்தக் கட்சி ஆதரவிலும் இந்தப் போராட்டங்களை அவர்கள் நடத்தவில்லை. மக்கள் நேரடியாகவே அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சிகள் அவை என்பதுதான் அவற்றுக்கிடையே இருந்த ஒற்றுமை.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நிலைமை சற்றே மாறிவிட்டது. உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் நெருங்க நெருங்க... பொதுச் சேவைத் தொழிலாளர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், செவிலியர்கள், குப்பைகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், மெட்ரோ மற்றும் ரயில் தொழி லாளர்கள், மத்திய, மாநில, உள்ளூர் போலீஸ்காரர்கள் என்று பல்வேறு தரப்பினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பிரேசிலை ஆண்ட சர்வாதிகாரி கெடுலியோ வர்காஸ், இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரி முசோலினியைப்போலவே தொழிலாளர் சட்டங்களை வகுத்திருக் கிறார். இங்கே எதிர்த்துப் பேச சட்டப்படி வழியே இல்லை. மே மாத இறுதியில் அதிபர் தில்மா, ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். அதன்படி நிர்வாகம் தொடர்பாக யாருக்கும் எந்தவிதக் குறை இருந்தாலும் அரசு நியமிக்கும் அமைப்புகளுடன் பேசித்தான் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, வேலைநிறுத்தம் செய்யக் கூடாது. எப்படி இருக்கிறது ஜனநாயகம்!

தி ரியோ டைம்ஸ் - பிரேசில் பத்திரிக்கை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE