சின்னஞ்சிறு அகதிகள்

By செய்திப்பிரிவு

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து புகலிடம் தேடி, அமெரிக்காவுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் வரும் சிறார்களுக்கு பால்டி மோர் நகரத்தில் தற்காலிக முகாம் அமைக்கும் திட்டம் சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம், அவர்களுக்குப் போதிய வசதிகள் அந்த முகாமில் அளிக்கப்படுமா என்ற சந்தேகம் தான். மெட்ரோ வெஸ்ட் அலுவலகக் கட்டிடம் காலியாக இருந்தாலும் தங்கும் வசதிகளற்றது. நூற்றுக் கணக்கான குழந்தைகளைத் தங்கவைக்க அந்த இடம் பொருத்தமானதல்ல.

மத்திய அமெரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, குழு வன்முறை மற்றும் உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்படும் சிறார்கள், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

கடந்த 2003 முதல் 2011 வரை 7,000 முதல் 8,000 வரையிலான எண்ணிக் கையில் சிறார்கள் யாருடைய துணையும் இல்லாமல் அமெரிக்காவுக்கு வந்துள்ள னர். இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அந்தப் பட்டியலில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆள்கடத்தும் கும்பல்கள், சமூக விரோதக் கும்பல்கள் மற்றும் போதை மருந்துக் கடத்தல்காரர்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற பதற்றத்தில் அவர்களின் பெற்றோர் உள்ளனர். அதேசமயம், அமெரிக்காவில் ஏற்கெனவே தங்கியிருக்கும் தங்கள் உறவினர்களிடம் சேர்ந்து இங்கேயே ஏதாவது வேலை செய்து, கிடைக்கும் பணத்தைத் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பலாம் என்று மத்திய அமெரிக்க சிறார்கள் நம்புகின்றனர்.

நாட்டின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் சிறார்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது முக்கியம்தான். அதேநேரத்தில், அவ்வாறு வரு பவர்களை உரிய மரியாதையுடன் நாம் நடத்த வேண்டும் என்பதும் முக்கியம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE