தன்னார்வ அமைப்புகளின் நம்பிக்கையை பெற்ற ‘தி இந்து’: உள்ளம் நெகிழ்ந்த கடலூர் மக்கள்

By என்.முருகவேல்

கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட் களை வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதையடுத்து, ‘தி இந்து’வின் வெள்ள நிவாரணக் குழுவிடம் தங்களது பொருட்களை ஒப்படைத்தனர் தன்னார்வலர்கள். கடந்த 22 நாட்களாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ‘தி இந்து’ மேற்கொண்டுவரும் நிவார ணப் பணிகளை அறிந்த தன்னார்வ அமைப்பினர், ‘உங்கள் மூலமாகவே நிவாரணப் பொருட்களை வழங்குகி றோம்’ எனக் கூறி பொருட்களை ஒப்ப டைத்துவிட்டுச் சென்றனர்.

சேலத்தைச் சேர்ந்த சோனா பொறி யியல் கல்லூரி நிர்வாகம், பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண்கள் அமைப்பு, பெரம்பலூரைச் சேர்ந்த ‘தி இந்து’ வாசகர்களான புன்னகை மன்றம்- நகை வியாபாரிகள் சங்கத்தினர் ‘தி இந்து’விடம் பொருட்களை ஒப்படைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘தி இந்து’ திருச்சி பதிப்பைச் சேர்ந்த ஊழியர்கள் கடலூரை அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில் பாதிக் கப்பட்டோருக்கு உணவு சமைத்து வழங்கினர். அத்துடன் அவர்களுக்கு தேவையான பிஸ்கெட், தார்பாய், அத்தி யாவசிய பொருட்களையும் வழங்கினர். வாசகர்கள் சார்பில் ‘தி இந்து’ வழங்கிய நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் பலர், வித்தியாச மான முறையில் இதுவரை யாரும் வழங்கிடாத வகையில் நிவாரணப் பொருட்களை வழங்குவதாகவும், இயற் கைச் சீற்றத்தின்போது ஏற்படும் இன்னல் களால் பாதிக்கப்பட்ட மக்கள் படும் அவஸ்தகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பொருட்களை கொடுப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

கைகோத்த தன்னார்வலர்கள்

பொருட்களை ஏற்றி வந்த வாகனங்க ளில் இருந்து அவற்றை இறக்கி வைக்க வும், தனித்தனியாக பிரித்து வைக்கவும் ‘தி இந்து’ வாசகர்கள் தன்னெழுச்சியாக வந்து சேவை புரிந்தனர். குறிப்பாக, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களும் கடலூர் ஹரித்தர ஹரி சகஸ்ர நாம அறக்கட்டளையினரின் பங்களிப்பு அளப்பறியது. முதியோர் முதல் குழந்தைகள் வரை பலரும் காலை முதல் மாலை வரை ஆர்வத்துடன் இந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

வாகனங்களில் வந்த பொருட்களை இறக்குவதும், அவற்றை மழையில் நனையாமல் பாதுகாப்பதிலும் இடை யூறு ஏற்பட்டது. அப்போது கடலூர் புனித அன்னாள் கல்வி நிலையம் தாமாக முன்வந்து, நிவாரணப் பொருட் களை தங்களது பள்ளி வளாகத்தில் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினர். இதையடுத்து பொருட்கள் அனைத்தும் அங்கு பத்திரமாக வைக்கப்பட்டன.

‘தி இந்து’ தமிழ் வாசகர்கள் உதவியு டன் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட வெள்ள நிவாரணப் பணிகள் விபரம்:

‘தி இந்து’ கடலூரில் நவம்பர் 21-ம் தேதி முதல் 22 நாட்கள் 86 கிராமங் களில் 53 லாரிகளில் வந்த நிவார ணப் பொருட்களை விநியோகம் செய்துள் ளது. இந்த நிவாரணப் பணிகளில் 80 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தனர்.

பயன்பெற்ற கிராமங்கள்: கல்குணம், பூதம்பாடி, அந்தராசிப்பேட்டை, வழுத லம்பட்டு, அகரம், தங்களிக்குப்பம், தொண்டமாநத்தம், குளத்து மேட்டுத் தெரு, ராமநாதன்குட்டை, அண்ணா கிராமம் குறவர் காலனி, வெங்கட்டம்மா குறவர் காலனி, அனுக்கம் அருந்ததியர் காலனி, மடப்புரம், வெங்கேடசபுரம், திருநாரையூர், செல்லங்குப்பம், தானம் நகர், நடுத்திட்டு, செங்கழனிபள்ளம், பொன்னாங்கன்னிமேடு, பிரம்மராய நகர், மண்டபம், சி.தண்டேசநல்லூர், திருநாரையூர் கிழக்கு காலனி, கீழவன்னி யூர், அருணாச்சலம் நகர், கண்டமங்கலம், லால்பேட்டை, கிள்ளை,வீராணம் ஏரிக் கரை, வெல்லியங்கால் ஓடை குடியி ருப்பு, வீராணநந்தபுரம் காலனி, கொத்த வாசல்,மடத்தான் தோப்பு, டி.எஸ்.பேட்டை. ஆதிநாராயணபுரம், நொச்சிக் காடு, உச்சிமேடு, தோட்டப்பட்டு, திரவுபதி அம்மன்கோயில் தெரு, சித்தனாங்கூர், ஆயிக்குப்பம், பெரியக்காட்டுசாகை, மேலழிஞ்சிப்பட்டு, வெங்கடாம்பேட்டை காலனி, குளத்துமேடு பெரியக் காட்டுப்பாளையம், வண்ணாரப் பாளையம், மணிக் கொல்லை, அலு மேங்காபுரம், வடலூர் ஆபத்ராணபுரம், பண்ருட்டி எழுமேடு, கொரத்தி, ஆண்டிக்குப்பம், வேலங்காடு, சேந்தநாடு, தட்டாஞ்சாவடி, பாலவி கார் பள்ளி, பெலாக்குப்பம், பாவைக் குளம், மானடிக்குப்பம், சிலோன் காலனி, பெரியாக் குறிச்சி பக்தா நகர், மேல்காங்கேயன்குப்பம், நெய் வேலி சொரத்தூர், நெய்வேலி மண்மேடு, குப்பன்குளம், சன்னியாசிபேட்டை ஆகிய கிராமங்களுக்கு உதவிகள் சென் றுள்ளன.

அதேபோல் புதுச்சேரி மாநிலம் கந்தன்பேட், கிருமாம்பாக்கம், பிள்ளை யார்குப்பம், நோனாங்குப்பம் என்.ஆர்.நகர், அரியாங்குப்பத்தில் சண் முகா நகர், சோலைநகர், கொடூர், ஆன்பாக்கம், சின்னபாபு சமுத்திரம், கென்டியங்குப்பம், கோபாலன்கடை ஆகிய கிராம மக்களும் ‘தி இந்து’ வாசகர்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களால் பயன்பெற்றனர்.

நிவாரண பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்