அபத்தங்களை எல்லாம் அன்பால் வெல்லலாம்!

By டி.எல்.சஞ்சீவி குமார், மு.முருகேஷ்

கொட்டிய மழையைவிட கிட்டிய உதவிகள் மிக, மிக அதிகம் நண் பர்களே. ‘உங்கள் முகாமுக்கு இதுவரை எத்தனை கோடி ரூபாய்க்கு உதவிப் பொருட்கள் வந்திருக்கும்?’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஒருகணம் வார்த்தைகள் வரவில்லை. முகாமில் மலை போல குவிந்திருக்கும் பாய்கள், போர்வைகள், மளிகைப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், பால் பவுடர், நாப்கின், சிறு பிளாஸ்திரி... இவை மீதெல்லாம் கண்களை ஓட விட்டேன். நிச்சயமாக அவற்றை விலைப் பொருட்களாக... வெறும் பொருட்களாக பார்க்க முடியவில்லை. விலை மதிப்பில்லாத பொக்கி ஷங்களாகவே தோன்றின. சட்டென்று அவை ஒவ்வொன்றும் உயிர் பெற்று அசைகின்றன. மனக்கண்ணில் உயரே உயரே சென்று... எங்கோ ஒரு வெள்ளத் தீவில் உயிராபத்தில் இருக்கும் மனிதரி டத்து சென்று உயிர் கொடுக்கின்றன. நிச்சயம் நீங்கள் கொடுத்தது பொருட் கள் அல்ல; அன்பை அளித்திருக்கி றீர்கள். உங்கள் ஆன்மாவை அளித்திருக்கி றீர்கள். முகம் அறிந்தவர்களுக்கு செய்யும் உதவியைவிட எங்கோ மூலை யிலிருப்பவருக்கு செய்யும் உதவியே உண்மையானது. நீங்கள் செய்வதும் அப்படித்தான் இருக்கிறது. யாரோ ஒருவர் அனுப்பியதை யாரோ ஒருவர் பெற்றுக்கொண்டு யாரோ ஒருவரிடம் சேர்ப்பிக்கிறார். அது இன்னொரு யாரோ ஒரு பாதிக்கப்பட்டவருக்கு செல்கிறது. நீங்கள் எல்லாம் ‘யாரோ’க்கள் அல்ல; ஹீரோக்கள். இதல்லவா பேரன்பு, இந்த பேரன்பின் முன்பு பெருமழை என்ன... பெருங்கடலும் தோற்றுவிடும்!

அப்படி யாரோ ஒருவர்தான் இந்த பிரவீண். மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே வசிக்கும் பிரவீணுக்கு வெள்ளத்தில் வீடு மூழ்கிவிட்டது. ஆனால், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நண்பர்கள் 18 பேரை திரட்டிக்கொண்டு இங்கே வந்துவிட்டார். வேளச்சேரி, கோட்டூர்புரம், சாரதி நகரைச் சேர்ந்த ஆயிரம் மக்களுக்கு இவர்கள் நிவாரணப் பொருட்களை கொடுத்திருக் கிறார்கள். “நாம வாழ்ற மண்ணுக்கும் மக்களுக்கும் எதுவுமே செய்யாம இருக்கிறோம்ங்கிற குற்ற உணர்வு இந்த நிவாரண வேலைகளில் ஈடுபட்ட பிறகுதான் குறைஞ்சிருக்கு” என்கி றார்கள் இந்த இளைஞர்கள்.

தாயை அழைத்து வந்த மழலை!

அடையாறு காந்தி நகரிலிருந்து வந்திருக்கிறார் ரேவதி பாஸ்கரன் (39). அருகிலேயே ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் அமுர்தா (10) அமர்ந்திருக்கிறார்.

“என்ன… குழந்தையையும் கூட்டிட்டு வந்துட்டீங்களா..?” என்று கேட்டால், “அய்யய்யோ…அவதாங்க என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கா..!” என்கி றார். “நான் உங்கள் பத்திரிகையை தென மும் படிப்பேன். அதுல எழுதியிருந்ததை பார்த்துட்டு அம்மாவை கூட்டிட்டு வந் துட்டேன்” என்கிறது அந்த மழலை!

தாயுமானவர்கள்!

முகாம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கோமதி சுரேஷும் ப்ரியாவும் அசராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகையாளரான கோமதி சுரேஷ், முகாமுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளையும் கவனிக்கிறார். பாதிக் கப்பட்டவர்கள் இவரது கனிவான பேச்சிலேயே பாதி நிவாரணம் பெற்று விடுவார்கள். பொருட்கள் தேவைப்படு வோருக்கும் - வழங்குவோருக்கும் இணைப்பு பாலமே இவர்தான். நிர்வாகத்துறை நிபுணரான ப்ரியா பொருட்களை கணக்கிடுவது, பிரித்து வைப்பது, மதிப்பிடுவது என பலதரப் பட்ட பணிகளை நிர்வகிக்கிறார். இருவருக்குமே குழந்தைகள் இருக் கிறார்கள். இவர்கள் தங்கள் குழந்தை களின் முகம் பார்த்து ஒரு வாரமாகிறது. உறவினரின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு எல்லோருக்குமான தாயாக உரு வெடுத்திருகிறார்கள் இந்த ‘யாரோ’ இரு உள்ளங்கள்!

சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு செய்ய முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்திருந்தனர்.

அன்பின் கனம் தாங்காமல் வரமறுக் கின்றன வார்த்தைகள். நாங்கள் விற்கி றோம்; நீங்கள் வாங்குகிறீர்கள்; நாங்கள் எழுதுகிறோம்; நீங்கள் படிக்கிறீர்கள் - என்பதை எல்லாம் தாண்டி வாச கர்கள் என்கிற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை கற்பித்திருக்கிறீர்கள் நீங்கள். அதன் பெயர் அன்பு. நம்பிக்கை பிறந்தி ருக்கிறது நண்பர்களே, இந்த உலகின் அபத்தங்கள் அத்தனையையும் அன் பால் வென்று விட முடியும் என்கிற நம்பிக்கை அது!

நன்றியுடன் பெற்றுக்கொண்டோம்!

* நாகர்கோவிலிலிருந்து எஸ்.நல்லபெருமாள் அன் சன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் 100 ஸ்டவ், 100 பாய், 100 பெட்ஷீட், 100 சேலை, 100 தட்டுகள், ரூ.88 ஆயிரம் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் வந்திருக்கின்றன.

* நாகர்கோவில் எஸ்.எல்.பி. வாக்கர்ஸ் கிளப் சார்பில் 100 பாய், 100 புடவை, 500 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும், நாகர்கோவில் வெங்கடேஷ் அனுப்பிய 250 கிலோ அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் வந்திருக்கின்றன.

* சென்னை நுங்கம்பாக்கம் ராஜூ, எம்.ஆர்.ஆர். டிரஸ்ட் சார்பில் 500 போர்வைகள், 500 படுக்கை விரிப்புகள் வழங்கினார்.

* அடையார் வழக்கறிஞர் யுவராஜ் 100 போர்வைகள் கொண்டு வந்து கொடுத்தார்.

* கோவை ‘தி இந்து’ அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.9,78,500 மதிப்புடைய நிவாரணப் பொருட்கள் கே.பி.என். டிராவல்ஸ் மூலம் நேற்று வந்து சேர்ந்தன. அதில் திருப்பூரைச் சேர்ந்த லக்ஸ் கார்மெண்ட்ஸ், ஜெ.எம். ஹொசெய்ரி நிறுவனத்தின் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பெண்கள், குழந்தைகள் ஆடைகள், கோவையைச் சேர்ந்த ‘அக்வா சப்’ இன்ஜினியரிங் நிறுவனத்தின் சார்பில் ரூ.2லட்சம் மதிப்பிலான பொருட்களையும், கோவில்பாளையம் விஜயா வங்கி கிளை சார்பில் ரூ.5 ஆயிரம் மதிப்பில் போர்வை, அரிசி உள்ளிட்டவற்றையும் வழங்கினர்.

* கிருஷ்ணா காலனி நலச்சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் துண்டு, போர்வைகள், புடவை, லுங்கி ஆகியவையும், பாரதிய வித்யா பவன் சார்பில் ரூ.7500 மதிப்பில் தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ்கெட் மற்றும் துணிகள் உள்ளிட்டவையும், கோவை ரோட்டரி சென்ட்ரல் அமைப்பு சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மருந்துகள், டார்ச் விளக்கு, கொசுவர்த்திசுருள், நாப்கின்கள், துணிகள் ஆகியவையும் வந்து சேர்ந்தன.

* இண்டஸ்நோவா டூர் நிறுவனம் சார்பில் ரூ.1.09 லட்சம் மதிப்பில் மருந்துகள், பால், கொசுவர்த்தி சுருள், குடிநீர், துணிகள் ஆகியவையும் பெறப்பட்டன.

* இதில் தனிநபர் பங்களிப்பாக கே.எல்.ரங்கநாதன் ரூ.10 ஆயிரத்துக்கு பேஸ்ட், சோப்பு, சானிடரி பொருட்கள், ஜி.எம்.யோனேஷ் சுப்பையா ரூ.2ஆயிரத்துக்கு சோப்பு, பேஸ்ட், பிரஷ் ஆகியவற்றையும் ஆர்.குமாரசாமி ரூ.10 ஆயிரத்துக்கு துண்டு, போர்வை, புடவைகளையும் வழங்கியுள்ளனர்.

* ராமாபுரம், ஜாபர்கான்பேட்டை, மைலாப்பூர் அம்பேத்கர் பாலம், பெரும்பாக்கம், மீஞ்சூர், விச்சூர், பொழிச்சலூர், மடிப்பாக்கம், கொசப்பூர், மாத்தூர், புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பு மற்றும் கிரீம்ஸ் ரோடு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் நேற்று விநியோகம் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்