தொட்டில் குழந்தைகள் திட் டத்தை 1992-ல் தான் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு முன்பாகவே உசிலம் பட்டி பகுதியில் பெண் சிசுக்களை பாது காக்கும் முயற்சியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்கள் பல குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
பகவதி - கந்தவேலு தம்பதியின் மகள் எஸ்தர் ராணி. பகவதிக்கு முதல் குழந்தை பெண் குழந்தை. கந்தவேலு இரண்டாம் தாரமாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கும் தலைச்சன் பெண் குழந்தை. மீண்டும் கர்ப்பமான பகவதிக்கு இரண் டாவது குழந்தையும் பெண்ணாகிப் போனது.
இரண்டு குழந்தைகளுக்கு வாழ கிடைத்த வாய்ப்பே பெரிது. இதில் மூன்றாவதும் பெண்ணானால் என்ன வாகும்! பெரும்பாலும் சாவுக்கு உயில் எழுதி வைக்கப்படும். இதை அறிந்த செல்லப்பாண்டியன் என்ற ஆசிரியர் பெண் குழந்தையை வாங்கிச் சென்று கோவில்பட்டியில் இருந்த ஒரு குழந்தை கள் காப்பகத்தில் சேர்த்தார். அதுதான் இப்போது வளர்ந்து இளம்பெண்ணாய் நிற்கும் எஸ்தர் ராணி.
பிறகு நத்தம் பெனியல் இல்லத்திலும் வளர்ந்தவர், நர்ஸிங் படிப்பு முடித்து இப்போது பணியில் இருக்கிறார். பத்து வயதிருக்கும்போது, தனது தாய் தந்தை யரை தேடி ஊருக்கு வந்து போனார். ஆனாலும், பெற்றோருக்கும் அவருக்கு மான இடைவெளியை குறைக்க முடிய வில்லை என்பது சோகம்தான்.
கள்ளிப்பாலுக்கு தப்பியவர்கள்
“அம்மா அப்பாவத் தேடிக்கிட்டு நான் இங்க வந்தப்ப எங்கப்பா உயிரோட இல்ல. குடிக்கு அடிமையாகி ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டதா அம்மா சொன்னாங்க. நம்ம செஞ்சது தப்புன்னு அம்மாவுக்கு நல்லா தெரி யுது. பெத்ததுமே பெயர்த்துப் போட்டுட் டதாலயோ என்னவோ எங்கம்மா என்கிட்ட ஒட்டவே இல்ல.
நான், எனக்குப் பிடிச்சவரை காதலிச்சேன். ‘3 பவுன் போட்டுக் கட்டிக் குடுக்குறேன்’னு சொன்ன எங்க அம்மா அதையும் போடல. 28 வருசத்துக்கு முந்தியே மண்ணுக்குப் போயிருக்க வேண்டிய என்னைய ஆண்டவன், சிசுக்களை காப்பாத்துற நர்ஸா உட்கார வச்சிருக்கான் பாருங்க’ என நெகிழ் கிறார் எஸ்தர் ராணி.
ஸ்டெல்லா. இவரும் எஸ்தருடன் பெனியல் இல்லத்தில் வளர்ந்தவர்தான். பிச்சை - கழுவாயி தம்பதியின் ஐந்தா வது பெண்ணாய் வந்து பிறந்தார். ஐந்தாவதும் பெண் என தெரிந்த நிலை யில் ஆண் பிள்ளைக்காக தவமிருந்த கழுவாயி உயிரிழந்தார். துக்கத்துக்கு வந்திருந்தவர்கள் குழந்தையை காப்பாற்றி காப்பகத்தில் ஒப்படைத்துள் ளனர். இப்போது ஸ்டெல்லாவுக்கு திருமணமாகிவிட்டது.
இப்போது மகளை சார்ந்திருக்கும் பிச்சையிடம், ’பெற்ற பிள்ளையை தூக்கிக் குடுக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? என்று கேட்டபோது, ‘சோத்துக்கு வழியில்லாதப்ப பொட்டப் புள்ளைய வச்சிருந்து என்ன பண்ண? பெத்தவளும் இல்லாம நண்டும் சிண்டுமா மூணு புள்ளைகள வச்சிக் கிட்டு என்ன பண்றது? அதுதான் கேட்ட வங்கட்ட குடுத்துட்டேன். இனிமே அந்தப் புள்ளதான் எங்கள வச்சுப் பாக்கணும்’ என்று சங்கடத்தோடு சொன்னார்.
விவாகரத்து மிரட்டல்
ரோஸ்லின் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவரது கதையைச் சொல் கிறார் செக்கானுரணியிலுள்ள கிராம பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் பசும்பொன். “ரோஸ்லின் அம்மா மீனாவுக்கு 12 வயசுலயே திருமணம் செஞ்சு வச்சிட்டாங்க. முதல் குழந்தை பொண்ணா பிறந்ததுமே அதை முடிக்கச் சொல்லி நிர்பந்திச்சிருக்காங்க. மீனா, புள்ளைய காப்பாத்துறதுக்காக தனக்குத் தானே தீ வைச்சுக்கிட்டு தற்கொலைக்கு துணிஞ்சுட்டா. மீனா பொழைச்சிக்கிட்டா. ஆனா, அவ ஆஸ்பத்திரியில இருந்த சமயத்துல புள்ளைய காணாம செஞ்சுட்டாங்க. இந்தச் சம்பவம் நடந்து 12 வருசம் கழிச்சு எங்கட்ட வந்து முறையிட்டா. அவரது கணவரை கேட்டதுக்கு, ‘எனக்கு அப்படியொரு புள்ளையே பொறக் கலைன்னு சத்தியம் பண்ணுனாரு.
குழந்தை பொறந்ததுக்கான ஆவ ணங்களை சேகரித்து நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டோம். விசாரித்ததில் பெண் குழந்தை பெற் றதால் மீனாவை விவாகரத்து செய் வதாகவும் அந்தக் குழந்தையைதானே வளர்ப்பதாகவும் ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்து ரூ.2.50 பத்திரத்தில் ‘தொடரா முறி’ எழுதிக் கொடுத்திருந் ததும் தெரிந்தது. குழந்தை ரோஸ்லின் நத்தம் பெனியல் காப்பகத்தில் இருந் ததை போலீஸ் கண்டுபிடிச்சிடுச்சுது. இப்ப, இன்ஜினீயரிங் முடிச்சுட்ட ரோஸ்லின், அப்பா சொத்துல சரிபாதி கேட்டு வழக்குப் போட்டுருக்கா’என்று சொன்னார்.
முதல் தண்டனை
கருப்பாயி - பெண் சிசுக்கொலைக் காக தமிழகத்திலேயே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முதல் தாய். உசிலம்பட்டி அருகிலுள்ள கட்டக்கருப்பன்பட்டியைச் சேர்ந்தவர்கள் கருப்பாயி - கருத்தக் கண்ணன் தம்பதி. இவர்கள் தங்க ளுக்குப் பிறந்த பெண் குழந்தையை கொன்று புதைத்து விட்டதாக ஐ.சி.சி.டபிள்யூ. என்ற தொண்டு நிறுவனம் போலீஸில் புகார் செய்தது. கைது, விசாரணைக்குப் பிறகு 1996-ல் மதுரை மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘பிறந்த குழந்தையானது அம்மாவின் அரவணைப்பில்தான் இருக்கும். எனவே, அவர் மட்டுமே இந்தக் கொலைக்கு பொறுப்பாவார்’ என்று சொல்லி கருத்தக்கண்ணனை விடுதலை செய்ததுடன் கருப்பாயிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதையடுத்து திருச்சி மத்திய சிறை யில் அடைக்கப்பட்ட கருப்பாயிக்கு அங் கேயும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஜெயில் ராணி என்று பெயர் வைத்தார்கள். ஜெயிலில் பிறந்ததால் தப்பிப் பிழைத்தது அந்தக் குழந்தை. பின்னர் தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், ‘சமூகமே தாயை அத்தகைய நெருக் கடிக்கு உள்ளாக்குகிறது. எனவே, இது ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் குற்றமே தவிர இந்தத் தாயின் குற்றமல்ல’ என்று தொண்டு நிறுவனங்கள் கருப்பாயிக்கு ஆதரவாக நின்றன. நீதிமன்றமும் சந்தேகத்தின் பலனை கருப்பாயிக்கு சாதகமாக தந்து அவரை விடுதலை செய்தது. முதல் தண்டனை பெற்ற முதல் தாயான கருப்பாயி மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் சிசுக் கொலைக்கு துணிபவர்களை அச்சுறுத்தி வைக்க முடியும் என்று நம்பினார் 1994-ல் மதுரை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த சுப்பிரமணியன்.
ஏ.டி.ஜி.பி-யாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் அவரை தொடர்பு கொண்டபோது, “சிசுக்கொலைகளை ஒழிக்கிறதுக்காக அப்போது உசிலைப் பகுதியிலுள்ள 180 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி னோம். யாராச்சும் பெண் குழந்தைகளை கொன்னாங்கன்னா எங்களுக்கு தகவல் சொல்லுங்கன்னு பள்ளிக்கூடத்துல படிக்கிற பொம்பள பிள்ளைகளிடம் போஸ்ட் கார்ட்டுகளை வாங்கிக் குடுத்தோம். கருப்பாயி தண்டனைக்குப் பிறகு வெளிப்படையா சிசுக்களை கொல்ல மக்கள் பயந்தாங்க.
பெண் சிசுக்கொலைக்கு எதிராக பாரதிராஜா எடுத்த ’கருத்தம்மா’ படம் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அதுக்காக பாரதிராஜாவை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு கூட்டிட்டுப் போயி மாலை, மரியாதை செஞ்சு கவுரவிச்சோம். 1990-களில் சேலம் பகுதியிலும் சிசுக் கொலை சம்பவங்கள் அதிகமா நடந்துச்சு. 1991-93-ல் நான் அங்க எஸ்.பி-யாக இருந்தப்ப சிசுக்கொலை சம்பந்தமா 15 வழக்குகளை போட்டேன்” என்றார்.
ஃபேண்டா…. மிரிண்டா…
உசிலம்பட்டி பகுதியில் கருக்கொலைகள் பெருகி வருவது குறித்து நேற்றைய ’தி இந்து’ செய்தியை படித்துவிட்டு காலையிலேயே நம்மை தொடர்பு கொண்டார் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் முன்னாள் மாநிலத் தலைவர் வி.எஸ்.நவமணி. ஆவேசமும் ஆத்திரமும் பொங்க பேசிய அவர், ’’உசிலம்பட்டி பகுதியில் கருக் கொலைகள் பெருகக்காரணமே மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள சில ஸ்கேன் சென்டர்கள் தான். காசுக்காக கருவைக் காட்டிக் கொடுக்கும் இந்த மையங்கள், அதிலும் நூதன முறையை கடைபிடிக்கின்றன. குழந்தை ஆணா, பெண்ணா என்று சொல்வது குற்றம் என்பதால் ஃபேண்டா ('F'anta) என்றும் மிரிண்டா ('M'irinda) என்றும் சங்கேத மொழியில் சொல்லிவிடுகிறார்கள். ஃபேண்டா என்றால் பெண் குழந்தை (Female), மிரிண்டா என்றால் ஆண் குழந்தை (Male). மருத்துவத் துறை அதிகாரிகள் இந்த ஸ்கேன் சென் டர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே கருக்கலைப்புகளை ஒழித்துவிடலாம்’ என்று சொன்னார். இப்போது, ஸ்கேன் சென்டர்கள் பற்றியும் விசாரணையை விரித்திருக்கிறது ‘தி இந்து’.
(கரு வளரும்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago