தேனீக்களுக்கு ஊரடங்கு இல்லை!

By செய்திப்பிரிவு

கேரளத்தின் வாழச்சல் காட்டுப் பகுதியில் இருக்கும் பழங்குடியினருக்கு நெருக்கடியிலும் ஒரு சின்ன ஆறுதல். பொது முடக்கத்தால் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்த அவர்கள் காட்டுக்குள்ளே தேன் வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். 300 பேருக்கும் மேல் தேன் வேட்டையில் ஈடுபட்டார்கள். மொத்தம் 1,800 கிலோ தேனைச் சேகரித்திருக்கிறார்கள்.

சென்ற ஆண்டை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உயரமான இடத்தில்தான் தேனீக்கள் கூடுகட்டும் என்பதால் அந்தத் தேனையெல்லாம் சேகரிப்பதென்பது லேசுபட்ட வேலையில்லை. மரத்தின் மீது மூங்கிலால் படி போன்று செய்துதான் மேலே ஏறித் தேனை எடுப்பார்கள். சேகரிக்கும் தேனை ‘வன சம்ரக்‌ஷண சமிதி’ என்ற, அரசால் நடத்தப்படும் அமைப்பிடம் கொண்டுபோய் கொடுப்பார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு கிலோ தேனுக்கு ரூ.450 கிடைக்கும். அந்தத் தேனை சுத்தப்படுத்தி அந்த அமைப்பினர் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பார்கள். கிடைக்கும் லாபத்திலும் தேன் வேட்டையாளர்களுக்குப் பங்கு உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

29 days ago

கருத்துப் பேழை

29 days ago

கருத்துப் பேழை

29 days ago

மேலும்