கொள்ளைநோய் காலத்தில் உறக்கம்

By செய்திப்பிரிவு

தொற்றாநோய்களான உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய், பக்கவாதம், புற்றுநோய் போன்றவற்றின் மீது உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது.இவையெல்லாம் நீண்ட கால உடல் உபாதைகளையும் மரணத்தையும் ஏற்படுத்தவல்லவை. உறக்கக் கோளாறுகள் இவற்றைவிட பரவலாகக் காணப்படுவதுடன் இவற்றில் பல பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுவது மறக்கப்படுகிறது.

கரோனா கொள்ளைநோய் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பலரும் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள். நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சம், பயணம் செய்யா முடியாதது, சமூகத் தனிமை, செயல்படாமை,பொருளாதார இழப்புகள் மற்றும் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமின்மை போன்றவற்றால் கணிசமாகத் தூக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும்போது அதனால் உறக்கமின்மை ஏற்படுகிறது. அது பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல்-சமூகவியல் பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்கிறது. சிகிச்சையளிக்கப்படாத உறக்கக் கோளாறுகளால் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை பாதிக்கப்படும்.

1. இதுபோன்ற சிரமமான காலகட்டத்தில் எளிமையான நடவடிக்கைகள் ஒரு மனிதர் உறங்குவதற்கு நன்கு உதவக்கூடும்.

2. செயல்பாடுகளில் ஈடுபடாமல் சோம்பேறித்தனத்துடன் இருந்தால் தூங்கும் நேரம் குறையும். தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மால்கள், உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டிருப்பதால் அந்த இடங்களைத் தவிர்க்கலாம். வீட்டுக்குள் இடமிருந்தால் சுற்றி சுற்றி நடக்கலாம்.இல்லையென்றால், மொட்டைமாடியில் நடக்கலாம். அப்படி நடந்தால் வெயில் நம் மேல் படும்; உடலுக்கும் நல்லது.

3. வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் வீட்டில் வேலை பார்ப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கிக்கொண்டு உரிய நேரத்தில் வேலை பார்க்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது தூங்கும் நேரத்திலும் கண்விழிக்கும் நேரத்திலும் எந்தக் கட்டாயமும் இல்லாதபோதும் தூங்குவதற்கு நேரத்தை ஒதுக்கிவைத்துக்கொள்வது முக்கியம்.

4. ஆரோக்கியமான உணவை, அதுவும் உரிய நேரத்தில் உண்பது அவசியம். முக்கியமாக, படுப்பதற்கு 2 மணிநேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்திருப்பது அவசியம். பால், தேன், வாழைப்பழம் மூன்றிலும் தூக்கத்தை வரவழைக்கும் பொருட்கள் இருப்பதால் படுப்பதற்கு முன்பு அவற்றை எடுத்துக்கொள்ளலாம். வேலைப் பளு காரணமாக முன்பெல்லாம் வீட்டில் உள்ளவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது குறைவாகவே இருந்திருக்கும். இப்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்.

5. குடும்பத்தினருடன் கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். புத்தகங்களைப் படிக்கலாம், நல்ல நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம். இது சலிப்படைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல் மனதை அச்சத்திலிருந்தும் கவலைகளிலிருந்தும் விலக்கி வைத்திருக்கும்.

6. வீட்டுக்கு அருகே இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களைச் சென்று பார்ப்பதும் ஆறுதலைத் தரலாம். ஆனால், கரோனா காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களைச் சென்று பார்க்க வேண்டாம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் வீடியோ வழியாகவும் செல்பேசி வழியாகவும் தொடர்புகொள்வது அவர்களது நலனுக்கு முக்கியம் என்பதுதன் அச்சத்தைத் தவிர்க்கவும் உதவும்.

7. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கோப்பை காபி, தேநீர் அருந்தினால் பிரச்சினை இல்லை. எனினும், படுப்பதற்கு 4அல்லது 5 மணி நேரத்துக்கு முன்பு இதுபோன்ற பானங்களைத் தவிர்த்தல் நல்லது. புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இரண்டையும் குறைத்துக்கொண்டால்,இன்னும் சொல்லப்போனால் அவற்றை முற்றிலும் நிறுத்திவிட்டால் நல்ல தூக்கத்தை உறுதிசெய்துகொள்ளலாம்.

இதற்கு முன்பு உறக்கக் கோளாறுகள் கொண்டவர்கள் தற்போதைய கரோனா சிகிச்சையின்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்களின் மருத்துவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.பேரழிவுகளும் துன்பச் சம்பவங்களும் ‘அதிர்ச்சிக்குப் பிந்தைய மனஅழுத்த’த்துக்கு இட்டுச்செல்லக்கூடும். இந்தக் கொள்ளைநோயின்போது உரிய சிகிச்சைகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டால் அதைத் தவிர்க்க முடியும். நன்றாக உறங்குங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.

- என். ராமகிருஷ்ணன், உறக்க நிபுணர், தி இந்து, தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்