விறுவிறுப்பான முன்னேற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் ‘ப்ளாக் செயின்’ எனப்படும் தொடர் சங்கிலித் தொழில்நுட்பம்தான் இத்தொடரின் முதன்மைக் கருப்பொருள். எந்தத் தொழில்நுட்பத்திலும், அதன் அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தால், வருங்காலத்தில் அதன் தாக்கங்கள் எவ்வாறாக இருக்கலாம் என்பதை யூகிக்க இயலும். இத்தொடரின் முதல் பகுதியில், தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்துக்கான அடிப்படைகளை ஆழமாகத் தெரிந்துகொள்ளலாம்.
Initial Public Offering , சுருக்கமாக IPO வணிக உலகில் பலருக்கும் தெரிந்த பதம். குறிப்பாக, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது இந்த IPO நிகழ்வுகளைத்தான். தனியார் நிறுவனம் ஒன்று தங்களது வருமானத்தைத் தொடர்ந்து அதிகரித்து வெற்றிபெற்றால், அந்த நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்கள் வாங்கி அதன் முதலீட்டாளர்களாகப் பயன்பெறும் சாத்தியம் இருக்கிறது. அதுபோலவே, நிறுவனத்தை நிறுவியவர்களுக்கும், அதில் முதலில் முதலீடு செய்தவர்களுக்கும் IPO நிகழ்வு தங்களது உழைப்புக் கும் மூலதனத்துக்குமான பலனை பன்மடங்காகப் பெற்றுக்கொள்ளும் வைபவமாக அமைகிறது. பொதுவாக, IPO நிகழ்வு ஆரம்பிக்கும்போது நிறுவனத்தின் பங்கு விலை குறைவாக இருக்கும். நிறுவனம் நீண்டகாலம் லாபமாக இயங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால், அதன் பங்குகளின் விலை பல மடங்காகலாம். அதன் மூலம் IPO தருணத் தில் பங்குகளை வாங்கியவர்களும் லாபமீட்டலாம் என்பதால் IPO நிகழ்வுகள் மீது முதலீட்டாளர்கள் வழிமேல் விழிவைத்து வரவேற்கப்படுவது இயல்பான ஒன்று. கடந்த சில மாதங்களாக, ICO என்ற பதம் தொழில்நுட்ப முதலீட்டு உலகில் உற்சாகமும், பதைபதைப்பும் கொண்ட பரபரப்பை உண்டாக்கியபடி இருக்கிறது.
அதென்ன ICO ?
Initial Coin Offering என்பதன் சுருக்கம்தான் ICO. இதை விளக்குவதற்கு முன்னால், இந்தத் தொழில்நுட்பத்தின் பாதையை விரைவில் பின்சென்று அது கடந்து வந்திருக்கும் மைல்கற்களையும், சில அடிப்படைகளையும் பார்த்தாக வேண்டும். அதுவரை ICO என்பதைக் குறிப்பாக எழுதி எண்ணக்கதவில் குத்தி வைத்துக்கொள்ளுங்கள். முதல் அடிப்படை Cryptography குறிப்பாக Public Key Cryptographyயைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியம்.
Cryptography அனைவருக்கும் தெரிந்ததே. ரகசியக் குறியீட்டு வடிவுகளின் மூலம் தகவல்களைச் சங்கேதமாகப் பரிமாறிக்கொள்ளும் அணுகுமுறை இது. பரிமாறப்படும் செய்திக்குப் பின்னிருக்கும் குறியீட்டு முறை பெற்றுக்கொள்பவருக்கு முதலிலேயே கொடுக்கப்பட்டுவிடும். Cryptography முக்கியமாகப் பயன்பட்டது உளவுத் துறையினருக்கு. அது தொன்றுதொட்டு இருந்ததை வள்ளுவர் ஒற்றாடல் என்ற அதிகாரத்தை ஒதுக்கியதிலிருந்து, இன்றைய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் வரை பார்க்க முடியும். இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்த தருணத்தில் ஜெர்மனி யில் கப்பல்கள் அனுப்பிய சங்கேத மொழியைப் பெயர்த்தெடுத்துப் புரிந்துகொள்ள ஆரம்பித்த பின்னர்தான் அவர்களது கடற்படையுடன் திறமாகச் சண்டை யிட முடிந்தது என்பதை உலகப் போர் வரலாற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
காகிதத்தில் எழுதிப் பரிமாறப்பட்ட சங்கேத தகவல்களைப் பெயர்த்தெடுப்பதே கடினம். இணையம் வந்த பின்னர் தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்வது பெரும் சவாலானது. குறிப்பாக, வங்கிச் சேவை போன்றவையும் இணையத்தில் நடத்தப்படலாம் என்ற நிலை வந்ததும் நம்பிக்கையான சங்கேத மொழி பரிமாற்றத்தின் தேவை வெகுவாக அதிகரித்தது. இணையம் வருவதற்கு முன்பாகவே Public Key Cryptography என்ற வழிமுறை வெளியானாலும், இணையம் என்ற ஊடகத்துக்குப் பொருத்தமான ரகசிய குறியீட்டு முறையாக இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சரி, Public Key Cryptography என்றால் என்ன ?
பயனீட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு திறவுகோல்கள் இருக்கும். ஒன்று, பொதுவானது (Public ). மற்றது, பிரத்யேகமானது (Private). இது இயங்குவதை இப்படி விளக்கலாம். எனக்கு ஏதேனும் தகவலை அனுப்பவேண்டுமெனில் கீழ்க்கண்டதைப் பின்பற்றவும் :
1. எனது பொதுவான திறவுகோலை வைத்து, எனது தகவல்பெட்டியைத் திறந்து, அதில் தகவலை வைத்து மூடிவிடவும்.
2. என்னிடம் இருக்கும் பிரத்யேகத் திறவுகோலைப் பயன்படுத்தி தகவல் பெட்டியைத் திறந்து, நீங்கள் விட்டிருக்கும் தகவலை நான் பெற்றுக்கொள்கிறேன்.
என்னுடைய பொதுத் திறவுகோலின் வடிவத்தை வைத்து, பிரத்யேகத் திறவுகோலை வடிவமைக்க முடியாது என்பதால் மற்றவர்கள் எனக்கு அனுப்பியிருக்கும் தகவல்களை நான் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும்.
(தொடரும்...)
அண்டன் பிரகாஷ், எழுத்தாளர்,
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
தொடர்புக்கு: anton.prakash@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago