சீன நாட்டில், அரசின் பார்வையில் படாமல் - அதே சமயம் - வேகமாக வளர்ந்துவரும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து உயர் அதிகாரிகள் இப்போது தங்களுடைய கவனத்தைத் திருப்பியுள்ளனர். சில நிறுவனங்கள் இதில் பெருமளவுக்கு ஈடுபடுவதுடன் அரசின் எந்தவிதக் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்படாமல் செயல்பட்டு வருவதுகுறித்து அவர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் இது தொடர்பாகவே அரசு தனி ஆவணம் ஒன்றைத் தயாரித்துள்ளது.
சீனப் பொருளாதார நிபுணர்கள் இதை ‘நிழல் வங்கி நடைமுறை’ என்று அழைக்கின்றனர். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வியாபாரி களுக்கும் உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கும் அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து அசலும் வட்டியுமாக வசூலித்துக்கொள்கின்றனர். இந்த நிதி நிறுவனங்களை நடத்துவோர் எந்தவித அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டாலும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளிடமிருந்துதான் தங்களுக்கான மூலதனத்தைக் கடனாகப் பெறுகின்றனர். அதாவது, குறைந்தவட்டிக்கு அரசிடம் கடன் வாங்கி, அதிக வட்டிக்கு வெளியில் வட்டிக்கு விடுகின்றனர். இந்தக் கடன் வழங்குவதும் மூடுமந்திரமாக இருக்கிறது.
கடன் வாங்குகிறவர்கள் திருப்பித் தருவார் களா, அதற்கென்ன உத்தரவாதம் என்றெல் லாம் கவலைப்படாமல்கூட இவர்கள் கடன் தருகிறார்கள். எனவே, இவர்கள் நொடித்துப்போனால் அந்தப் பாதிப்பு அரசு வங்கிகளையும் தொற்றிக்கொள்ளுமே என்ற கவலையும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டி ருக்கிறது.
இப்படி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியமைப்புகளிடமிருந்து கட்டுப்பாட்டுக்குள் வராதவர்கள் கடன் பெறுவதால் வட்டிவீதங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. வழக்கமாகக் கடன் கேட்கிறவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்காதபடி அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருப்பதால் இந்த இணை நிதி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.
கையில் பணம் இருப்பவர்கள் ஊக வியாபாரி களைப் போல வீட்டடி மனைகளிலும் அடுக்க கங்களிலும்கூட முதலீடு செய்யத் தொடங்கி யுள்ளனர். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தனியார் முதலீட்டாளர்களின் வெவ்வேறு துறை களில் முதலீடு செய்யும் விருப்பங்களையும் நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர்.
அரசு வங்கிகள் கடன் தருவதாக இருந்தால் அரசுத் துறை நிறுவனங்களுக்குத்தான் முன்னு ரிமை தர வேண்டும் என்பதால் தனியார் தொழில் நிறுவனங்களும் உள்ளாட்சி மன்ற அமைப்புகளும் இந்தத் தனியார் நிதி நிறுவனங் களை அதிகம் நாடுகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 40% அளவுக்கு இந்த இணை நிதி நிறுவனங் களில் பணம் புழங்குகிறது என்று சீன அதிகாரிகளே மதிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் ஒருவேளை இந்த நிறுவனங்கள் மீது கடுமை யான நடவடிக்கைகள் எடுத்தால் அது சீனத்தின் தொழில், நிதித் துறை நடவடிக்கை களையேகூட ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு இது வளர்ந்திருக்கிறது. எனவே, அரசே நடவடிக்கையை எப்படி எடுப்பது என்று யோசிக்கிறது. எனவே, சீன அமைச்சரவையே இந்த நிதிப் பரிமாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை, சிலருக்குப் பயன் தருபவை என்று சுட்டிக்காட்டுகிறது. எனவே, இதை ஒரேயடியாகத் தடுத்துவிடாமல், கண் காணிக்க வும் கட்டுப்படுத்தவும் என்ன செய்யலாம் என்றும் யோசிக்கப்படுகிறது.
இப்படி இணையான நிதி அமைப்புகள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கும் தங்க ளுடைய நிதிக் கொள்கைகளையும் கட்டுப்பாடு களையும் அரசு மறுபரிசீலனை செய்வதுதான் முதல் தேவையாக இருக்கிறது. இதற்குப் பிறகே இந்த இணை நிதியமைப்புகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுக்கருத்து உருவாகிறது.
தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago