வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது சுவாரஸ்யமானது மட்டும் அல்ல; பாடம் படிப்பதும் ஆகும். நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளைத் திரும்பப் பார்க்கும்போது இதே உணர்வுதான் தோன்றுகிறது.
1951-52ல் போட்டியிட்ட கட்சிகள்
1951-52 மக்களவைப் பொதுத்தேர்தலில் தேசியக் கட்சிகளாக 14 பதிவுசெய்யப்பட்டிருந்தன. மாநிலக் கட்சிகள் எண்ணிக்கை 39. சுயேச்சைகளும் பெரும் எண்ணிக்கையில் போட்டியிட்டனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகுநடந்த தேர்தல் என்பதால், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விவசாயிகள், தொழிலாளர்கள், சமதர்ம சிந்தனையுள்ளவர்கள், தேசபக்தர்கள் என்று சகல தரப்பாருக்கும் ஏற்ப கட்சிகளும் களத்தில் இருந்தன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆதரவாளர்கள் ஃபார்வார்டு பிளாக் கட்சியை ஆதரித்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் அகில இந்தியக் கட்சி ஒன்றை நடத்தினர். சாதி, மதம் சார்ந்த கட்சிகளைத் தவிர, மாநிலப் பெயருள்ள கட்சிகளும்கூட பல இருந்தன.
தேசியக் கட்சிகள்
1.அகில இந்திய பாரதிய ஜன சங்கம்
(பி.ஜே.எஸ்.)
2.இந்திய போல்ஷ்விக் கட்சி (பி.பி.ஐ.)
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)
4.ஃபார்வார்டு பிளாக் (மார்க்சிஸ்ட் குரூப்) [எஃப்.பி.எல். (எம்.ஜி.)]
5.ஃபார்வார்டு பிளாக் (ரூய்கார் குரூப்) [எஃப்.பி.எல். (ஆர்.ஜி.)]
6.அகில பாரதிய ஹிந்து மகாசபா
(எச்.எம்.எஸ்.)
7.இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.என்.சி.)
8.கிருஷிகார் லோக் கட்சி (கே.எல்.பி.)
9.கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
(கே.எம்.பி.பி.)
10.இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (ஆர்.சி.பி.ஐ.)
11.அகில பாரதிய ராம் ராஜ்ய பரிஷத் (ஆர்.ஆர்.பி.)
12.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
(ஆர்.எஸ்.பி.)
13.அகில இந்தியப் பட்டியல் இன சம்மேளனம் (எஸ்.சி.எஃப்.)
14.சோஷலிஸ்ட் கட்சி (எஸ்.பி.)
மாநிலக் கட்சிகள்
15.அனைத்து மணிப்பூர் தேசிய யூனியன் (ஏ.எம்.என்.)
16.அனைத்து மக்கள் கட்சி (ஏ.பி.பி.)
17.சோட்டா நாகபுரி சந்தால் பர்கானா ஜனதா கட்சி (சி.என்.எஸ்.பி.ஜே.பி.)
18.கொச்சி கட்சி (சி.பி.)
19.காமன்வீல் கட்சி (சி.டபிள்யூ.எல்.)
20.பஞ்சாப் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் லீக் (டி.சி.எல்.)
21.அகில இந்திய கணதந்திர பரிஷத் (ஜி.பி.)
22.காந்தி சேவக் சேவா (ஜி.எஸ்.எஸ்.)
23.மலைவாழ் மக்கள் கட்சி (எச்.பி.பி.)
24.வரலாற்று ஆய்வாளர் (கட்சி) (எச்.ஆர்.)
25.ஹைதராபாத் மாநில மக்கள் கட்சி
(எச்.எஸ்.பி.பி.)
26.ஜார்க்கண்ட் கட்சி (ஜே.எச்.பி.)
27.நீதிக்கட்சி (ஜே.யு.எஸ்.பி.)
28.காசி - ஜயந்தியா தர்பார் (கே.ஜே.டி.)
29.கிசான் ஜனதா சம்யுக்த கட்சி
(கே.ஜே.எஸ்.பி.)
30.காம்கர் கிசான் பக்ஷ (கே.கே.பி.)
31.கிசான் மஸ்தூர் மண்டல் (கே.எம்.எம்.)
32.குகி தேசிய சங்கம் (கே.என்.ஏ.)
33.கேரள சோஷலிஸ்ட் கட்சி (கே.எஸ்.பி.)
34.லோக் சேவக் சங்கம் (எல்.எஸ்.எஸ்.)
35.சென்னை மாநில முஸ்லிம் லீக் கட்சி (எம்.எல்.)
36.இந்திய தேசியக் கட்சி (என்.ஏ.டி.)
37.மக்கள் ஜனநாயக முன்னணி
(பி.டி.எஃப்.)
38.பிரஜா கட்சி (பி.பி.)
39.புருஷாரதி பஞ்சாயத் (பி.யு.ஆர்.பி.)
40.விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி (பி.டபிள்யு.பி.)
41.அனைத்திந்திய குடியரசுக் கட்சி (ஆர்.இ.பி.)
42.அகில இந்தியக் குடியரசுக் கட்சி
(ஆர்.பி.பி.)
43.உ.பி. புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
[ஆர்.எஸ்.பி. (யு.பி.)]
44.சிரோமணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.)
45.எஸ்.கே. பக்ஷ (எஸ்.கே.பி.)
46.சௌராஷ்டிர கேதுத் சங்கம்
(எஸ்.கே.எஸ்.)
47.தமிழ்நாடு தொழிலாளர் கட்சி (டி.என்.டி.)
48.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி (டி.பி.)
49.பழங்குடிகள் சங்கம் (டி.எஸ்.)
50.திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி (டி.டி.சி.)
51.அனைத்திந்திய ஐக்கிய கிசான் சபா
(யு.கே.எஸ்.)
52.உ.பி. பிரஜா கட்சி (யு.பி.பி.பி.)
53.ஜமீன்தார் கட்சி (இஜட்.பி.)
தாவீது x கோலியாத்துகள்
இந்திய விடுதலை எனும் மாபெரும் பரிசை மக்களிடம் அளித்துவிட்டுப் பிரமாண்டமாக நின்ற நேருவுக்கும் காங்கிரஸுக்குமே சவால் விட்டவர்கள் இவர்கள். ஆனால், இன்றைக்குப் பார்க்கும் போது சில கட்சிகள் பிரிந்திருக்கின்றன, பல கட்சிகள் உருமாறியிருக்கின்றன, பல கட்சிகளைக் காணவில்லை, சில கட்சிகள் மட்டுமே நீடிக்கின்றன. மாறாக, மேலும் பல புதிய கட்சிகளையும் பார்க்கிறோம். வரலாறு உணர்த்தும் பாடம் என்ன? பதில் மிக எளிமையானது: மக்களே எஜமானர்கள்; எப்போதும் எல்லாக் காலத்திலும் எல்லோரையும் அவர்கள் மன்னித்துக்கொண்டே இருக்க மாட்டார்கள்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago