ஆப்பிள்: 11 ரகசியங்கள்

By செய்திப்பிரிவு

எங்கும் நிறை ஐ-போன், ஐ-பேட் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருக்கிறது. இந்த நிறுவனம் குறித்து மிகக் குறைவாகவே வெளியுலகுக்குத் தெரியும். மேலும் தெரிந்துகொள்ளச் சில தகவல்கள்:

1ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு தத்துப்பிள்ளை, அப்பா சிரிய நாட்டவர்:

ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக், ரொனால்ட் வெய்ன் என்ற மூவர் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், 2011 அக்டோபரில் காலமானார். ஜோன் ஷிபல், அப்துல்ஃபட்டா ஜண்டாலி என்ற இருவரும் தங்களுடைய 23-வது வயதில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது சந்தித்துக்கொண்டனர். அவர்களுடைய மகன்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். ஷீபலின் பெற்றோர் கொடுத்த நெருக்குதல் காரணமாக 1955-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் தத்துக்கொடுக்கப்பட்டார். ஷீபலும் ஜண்டாலியும் பிறகு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

2 ஆப்பிளின் முதல் கம்ப்யூட்டருக்கு ‘சாத்தான்’ விலை:

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் கணிப்பொறி ‘ஆப்பிள்-1’ விலை 666.66 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டது. 6 என்ற எண் அடுத்தடுத்து 3 முறை வருவது சாத்தானைக் குறிப்பது என்பது விலையை நிர்ணயித்த ஸ்டீவ் வோஸ்னிக்குக்குத் தெரியாது. அந்தக் கணிப்பொறியின் மொத்த விற்பனை விலை 500 டாலர். அத்துடன் மூன்றில் ஒரு பங்கு விலையைச் சேர்த்து சில்லறை விற்பனை விலையை நிர்ணயித்தார். 667 டாலர் என்பதே அந்த விலை. ஆனால், பில்லில் ‘டைப்’ செய்ய வசதியாக இருக்கட்டும் என்று 666.66 என்று நிர்ணயித்தார்!

3 விமானத்தில் பறக்கும் ஆப்பிள்:

கத்தாய் பசிபிக் விமான நிறுவனத்தின் மிகப் பெரிய வாடிக்கையாளர் ஆப்பிள் நிறுவனம்தான். கப்பல் வழியாக அனுப்ப விரும்பாமல் தன்னுடைய தயாரிப்புகளை விமானம் மூலமே அனுப்பியது. இதனால் சரக்குகள் உரிய இடத்தை வெகு விரைவாக அடைந்தன. சரக்குக் கட்டணம் அதிகமாக இருந்தாலும், சரக்குகள் விற்பனைக்கு வராமல் முடங்கும் காலம் கணிசமாகக் குறைந்தது. இதனால், கையிருப்பு ஸ்டாக்குகளில் பணம் முடங்குவது கணிசமாகக் குறைந்தது. கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குப் பெட்டகங்களில் கைபேசிகள், டேப்லெட்டுகள், கணிப்பொறிகள் வருவதை அறிந்து அதை கொள்ளைக்காரர்கள் கடத்தும் ஆபத்தும், விபத்து நேரிட்டால் கடலில் மூழ்கி, சந்தைக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளும் உண்டு. அது விமானத்தில் அனுப்பியதால் தவிர்க்கப்பட்டது.

4மசின்டோஷ்:

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ‘மசின்டோஷ்’, ஜெஃப் ரஸ்கினுக்கு மிகவும் பிடித்த ரகம். அப்போதைக்கு அது குறியீட்டுப் பெயர்தான். ரஸ்கின் அலுவலகத்தில் இல்லாத நேரம் அங்கு வந்த ஜாப்ஸ் அதற்கு ‘பை-சைக்கிள்’ என்று பெயர் சூட்ட முற்பட்டார். என்ன காரணத்தாலோ அது தடைப்பட்டது. ‘மசின்டோஷ்’ என்ற பெயர் நிலைத்ததுடன் நன்கு பிரபலமும் ஆகிவிட்டது.

5ஆப்பிளின் வித்தியாசமான ஹீரோ ஷாட்டுகள்:

ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பரங்களில் இடம்பெற்ற படங்கள் கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்டவை அல்ல. மிக நன்றாகப் படம்பிடிக்கப்பட்ட சூப்பர் - குளோசப் புகைப்படங்களைச் சேர்த்து உருவாக்கியவை.

6ஸ்டீவ் வோஸ்னியாக் இன்னமும் ஊழியர்தான்:

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக், வோஸ் என்றும் அழைக்கப்படுவார்.

1976-ல் தன்னுடைய கார் கேரேஜில் ஸ்டீவ் ஜாப்ஸுடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது தொடர்ந்து வேலைக்கு வருவதில்லை என்றாலும், ஊழியர் பட்டியலில் பெயர் இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு 1,20,000 டாலர்கள் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

7ஓ வவ். ஓ வவ். ஓ வவ்:

ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன்னால் தனது படுக்கைக்கு அருகில் திரண்டு நின்ற குடும்பத்தினரைப் பார்த்து “ஓ வவ். ஓ வவ். ஓ வவ்” என்று 3 முறை கூறியதாக அவருடைய சகோதரி மோனா சிம்ப்சன் தெரிவிக்கிறார். மோனா எழுதிய இரங்கல் கவிதைதான் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு பிரார்த்தனைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது.

83,500 கோடி டாலர்கள் போச்சே:

ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக், ரொனால்ட் வெய்ன் ஆகிய மூன்று பேர் தொடங்கினர். இவர்களில் ரொனால்டுதான் ஆப்பிள் நிறுவனத்தின் இலச்சினையை வரைந்து, கூட்டு ஒப்பந்தப் பத்திரத்தைத் தயாரித்து, ‘ஆப்பிள்-1’ கணினி நிறுவனத்துக்கான தயாரிப்பு வரைமுறையை எழுதியவர். பிறகு, கடன் தொல்லையால், அந்த நிறுவனத்தில் தனக்கிருந்த 10% பங்குகளை வெறும் 800 டாலர்களுக்கு விற்றுவிட்டார். அந்தப் பங்குகளை மட்டும் அவர் இப்போது தன்னிடமே வைத்திருந்தால், அதன் மதிப்பு 3,500 கோடி டாலர்களாகும்!

9ஐவ்-வுக்கு நன்றி:

வெள்ளை நிறத்தில் எதையுமே தயாரிக்கக் கூடாது என்று முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பாளரான சர் ஜானி ஐவ் அதை வெள்ளை நிறத்தில் தயாரித்தபோது ஏற்றுக்கொண்டார். ‘மூன் கிரே’ வண்ணத்தில் தயாரித்துக் காட்டினாராம் ஐவ். அது வேண்டாம் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் நிராகரித்ததால் வெள்ளை நிறத்தில் தயாரித்துக் காட்டினாராம். இதை மற்றொரு வடிவமைப்பாளரான டக் ஸாட்ஸ்கர் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

10கட்டு எப்படி?

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய பொருள்களைத் தயாரிக்க எடுத்துக்கொள்ளும் அக்கறைக்குச் சற்றும் குறைவில்லாமல் அதை அடைக்கும் பேக்கிங்குகளுக்கும் தருகிறது. கலிஃபோர்னியாவின் கபுர்டினோ என்ற இடத்தில், பேக்கிங் வடிவமைப்பதற்காக ரகசிய இடத்தையே வைத்திருந்தார்களாம். பேக்கிங் டிசைனர்கள் என்ற வடிவமைப்பாளர்கள் மணிக் கணக்கில் வேலை செய்து விதம்விதமாகப் பெட்டிகளைத் தயாரித்துவந்து காட்டுவார்களாம். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை விலைகொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் வீட்டுக்குப் போய் அதைப் பிரிக்கும்போது அவர்களுடைய முகங்களில் ஏற்படும் மகிழ்ச்சி, திருப்தி, பூரிப்பு, பெருமிதம் ஆகியவை வெளிப்படும் விதத்தில் பேக்கிங் இருக்க வேண்டும் என்பதற்காகவே அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆப்பிள் சாதனங்கள் கண்ணுக்குத் தெரியாதபடிக்குப் பெட்டியில் அடைத்து வைக்கப்படும். அந்த அட்டைப் பெட்டியை எப்படி, எங்கே, சேதமில்லாமல் எளிதாகப் பிரிக்க வேண்டும் என்று அம்புக்குறிகளும் வாசகங்களும் பொறித்திருப்பார்கள். அந்தக் குறிகளைத் தயாரிக்கவும் அதற்கு வண்ணம் தேர்வு செய்யவும்கூட பெரும் அக்கறை எடுத்துக்கொண்டார்கள்.

11பந்துகள்:

ஜானி ஐவ் வாழ்க்கைகுறித்துப் புத்தகம் எழுதிவரும் லியாண்டர் கானி தனது புத்தகத்தில், ‘ஐமேக் ஜி4’ என்பது ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தைச் சேர்த்துள்ளார். அந்த சாதனத்தில் பந்து வடிவ ஸ்பீக்கர்கள் அதன் இரு புறங்களிலும் இருப்பதைப்போல வடிவமைத்துள்ளனர். அசப்பில் இது ஆணின் மர்மஸ்தானத்தைப் போலவே காட்சிதருகிறது. இது என்ன என்று கேட்டால், வடிவமைப்பாளர்கள் வேண்டுமென்றே இப்படி இதைச் செய்ததாகப் பதில் கிடைத்திருக்கிறது.

ஜானி ஐவ் உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர். அவருடைய பள்ளிக்கூடப் புகைப்படமும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தில் அவருடைய கிராப்புத் தலை மிக வித்தியாசமாக வசீகரமாக இருக்கிறது.

� தி கார்டியன், தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்