கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதை சட்டம் அனுமதிப்பது இல்லை. முன்னாள் ராணுவ அதிகாரி ஹரீஷ் உப்பல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2002-ம் ஆண்டில், நீதிமன்றப் புறக்கணிப்புகளை அனுமதிக்கவே முடியாது, அது சட்ட விரோதம் என்று அறிவித்தது. மேலும் அரிதினும் அரிதான காரணங்களுக்காக ஒருநாள் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்காக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை; அன்று வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றாலும் கோப்புகளின் தன்மை அறிந்து வழக்குகளை பைசல் செய்யவும் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது. தமது தொழில் கடமைகளைக் கருதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புகளைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்றும் கூறியது.
ஆனாலும், தமிழகத்தில் ஏதோ ஒரு பிரச்சினைக்காக ஓர் ஆண்டுக்கு 30 முதல் 40 நாட்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் தொடர்கின்றன. தமிழை நீதிமன்ற ஆட்சி மொழியாக்க சமீபத்தில் நடந்த புறக்கணிப்புப் போராட்டத்தில், பணிக்கு சென்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிபதி முன்பாகவே தாக்கப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றமே சுயமாக (sue moto) நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முன்னாள் வக்கீல் சங்கத் தலைவர் மீது எடுத்தது. அந்த வழக்கு தற்போது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் விசாரணையில் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் வழக்கறிஞரின் சன்னத் அல்லது உரிமத்தைப் பறிக்க வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் உருவாக்கிய விதிகளில் வழி உண்டு.
வி.சி.மிஸ்ரா என்ற பார் கவுன்சில் தலைவர் அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிக்கு எதிரே ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றமே சுயமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து, அவரை தண்டித்தது. ஆனால், அவரது தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுவில், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் பார் கவுன்சில்களுக்கு மட்டுமே உண்டு என்று தீர்ப்பு மாற்றிக் கூறப்பட்டது.
டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டன. அந்த வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் ரகசியமாக அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றமும்.
உச்ச நீதிமன்றமும் அந்த வழக்கறிஞரின் உரிமத்தை பறித்தன. பின்னர் அவரது சீராய்வு மனுவில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு 14 லட்சம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு ஏழைகளுக்கு சட்ட உதவி வழக்குகளில் மட்டும் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.
2009-ம் ஆண்டின் அத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர் சட்டம் 34-வது பிரிவின்படி நீதிமன்றங்களுக்குள் தவறு இழைக்கும் வழக்கறிஞர்களைத் தண்டிக்க இரு மாதங்களுக்குள் விதிகளை வகுக்க உத்தரவிட்டது. அதன்படி 2004-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் விதிகளை வகுத்தாலும் வழக்கறிஞர்களின் எதிர்ப்பால் அவை 25 நாட்களில் திரும்பப் பெறப்பட்டது. உச்சநீதிமன்ற கெடுவுக்குப் பின்னரும் விதிகள் உருவாக்கப்பட்டு, அவை அரசிதழில் வெளியிடப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago