திமுக தலைவர் கருணாநிதி முன்பு அடிக்கடி சொல்லும், “தூங்கும் புலியை இடற வேண்டாம்” என்ற வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன! இப்போது அவருடைய மகன் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு மிகவும் காட்டமான எச்சரிக்கையை உரிய நேரத்தில் விடுத்திருக்கிறார். கிருஷ்ணகிரி, வேலூர் பகுதியில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்துவிட்டு இந்தியில் ஊர்ப் பெயர்களை எழுதியிருப்பதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருக்கிறார். இன்னொரு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் தேவைதானா என்று மோடி சர்க்கார் யோசிக்க வேண்டும். இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காப்பாற்றும் வகையில் அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்று அவர் வைத்திருக்கும் கோரிக்கை நியாயமானது.
இப்படியொரு விஷயம் நடந்த உடனேயே “வட மாநிலங்களிலிருந்து வரக் கூடிய ஓட்டுநர்களுக்கு இப்படி இந்தியில் எழுதுவது உதவியாக இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார், மத்திய அரசை ஆளும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன். அப்படியென்றால், மத்திய நெடுஞ்சாலைத் துறை இந்த விஷயத்தில் இந்திய ரயில்வே துறையிடம் பாடம் படிக்க வேண்டும். சென்னையில் ஓடும் அனைத்து புறநகர் ரயில்களிலும் அடுத்து வரப்போகும் ரயில் நிலையத்தின் பெயர் தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மூன்று மொழிகளிலும் அறிவிக்கப்படுகிறது. பெயர்களும் அந்தந்த மொழிகளிலேயே ஒளிர்கின்றன. இது நல்ல உதாரணம்.ஒருவேளை, மைல் கற்களில் இந்தி வேண்டும் என்று கருதினால், இந்த உத்தியைக் கையாளலாம். அந்தந்த மாநில மொழிக்கு முதலிடம், ஆங்கிலத்துக்கு இரண்டாவது இடம், இந்திக்கு அடுத்த இடம்! பொன்.ராதாகிருஷ்ணன் கூடவே இன்னொரு விஷயத்தையும் பேச வேண்டும். வட இந்தியாவில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் பெருமளவில் இந்தியில் மட்டுமே பெயர்கள் அமைந்திருக்கின்றன. பெருநகரங்களிலும் முக்கியமான இடங்களிலும் மட்டுமே விதிவிலக்காக ஆங்கிலத்திலும் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டெல்லி நோக்கி வருபவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு, எல்லாப் பெயர்ப் பலகைகளிலும் ஆங்கிலத்தில் பெயர்கள் இடம்பெறுவதைக் கட்டாயமாக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். செய்வீர்களா ராதாகிருஷ்ணன்?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago