சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது.
சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது. அதே சமயத்தில் அது ஒரு தோசையைப் போலத் தட்டை வடிவத்தையும் பெற்றது. அதிலிருந்த தூசி மற்றும் துகள்களின் திரள் அதன் மையத்தை நோக்கி நகர்ந்து, அங்கு குவிந்து, சூரியனாகத் திரண்டது. அவ்வாறு திரண்டவை போக மீதமிருந்த துகள்கள் ஒன்றொடொன்று மோதி ஒட்டிக்கொண்டு அஸ்டராய்டுகளாகவும் வால் விண்மீன்களாகவும், கோள்களாகவும், நிலவுகளாகவும் திரண்டன. சூரிய மண்டலம் உருவானது இப்படித்தான்.
சூரிய மண்டலத்திலுள்ளவற்றில் சூரியன்தான் மிகப் பெரியது. சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. அதிலிருந்துதான் பூமியில் உயிரினங்கள் வாழ உதவும் வெப்பமும் ஒளியும் வெளிப்படுகின்றன. கோள்கள் லேசான நீள்வட்டப் பாதைகளில் சூரியனைச் சுற்றிவருகின்றன. சூரியன் அந்த நீள்வட்டப் பாதைகளின் குவியப் புள்ளியில் அமைந்துள்ளது.
உள் சூரிய மண்டலம்
இப்பகுதியிலுள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்களும் அவற்றின் நிலவுகளும் பூமியொத்த கோள்கள் எனப்படும். அவை இரும்புக் கனிமங்களாலும், பாறைகளாலும் ஆனவை. அவையெல்லாம் ஏறத்தாழ ஒரே பரிமாணமும் கட்டமைப்பும் கூட்டமைப்பும் கொண்டவை. பூமிக்குச் சந்திரன் என்ற ஒரு துணைக் கோளும் செவ்வாய்க்கு டெய்மோஸ், போபோஸ் என்ற இரண்டு நிலவுகளும் உள்ளன.
செவ்வாய், வியாழன் ஆகியவற்றின் ஓடுபாதைகளுக்கு இடைப்பட்டு அஸ்டராய்டுகள் எனப்படும் குட்டிக் கோள்களின் ஓடு பாதை அமைந்துள்ளது. அதில் ஏழரை லட்சத்துக்கும் அதிகமான குட்டிக் கோள்கள் உள்ளன. அவற்றில் 950 கிலோ மீட்டர் விட்டமுள்ள செரஸ் முதல் இம்மியளவிலான தூசுகள் வரை அடங்கும். இந்தத் தூசுகளின் ஒடு பாதைகள் சூரிய மண்டலத்துக்குள் குறுக்கிடும்போது அத்தூசுகள் கோள்களால் ஈர்க்கப்படும். பூமியின் வளிமண்டலத்துக்குள் வரும் அஸ்டராய்டுகள் உராய்வு காரணமாகத் தீப்பற்றி எரியும். அவை கண்ணில் பட்டால் வானில் வாண வேடிக்கைகளைப் பார்க்கலாம். அவை எரிகொள்ளிகள் எனப்படும். சில அஸ்டராய்டுகள் முழுமையாக எரியாமல் பூமியில் வந்து விழும். அவை எரிகற்கள் எனப்படும்.
வெளி சூரிய மண்டலம்
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் வெளி சூரிய மண்டலத்தில் இடம் பெறுகின்றன. அவை பிரம்மாண்டமானவை. அவற்றில் வாயுக்கள் திட நிலையிலும் திரவ நிலையிலும் பரவியிருக்கும். அதில் பெரும்பகுதி ஹைட்ரஜனும் ஹீலியமும் தான். அவையே அக்கோள்களின் நிறையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வாயுப் படலங்கள் சூரியனில் உள்ளதைப் போன்ற கூட்டமைப்பைக் கொண்டவை. அதற்குக் கீழேயுள்ள ஹைட்ரஜனும் ஹீலியமும் இறுகி பாறை போல உறைந்திருக்கும். அதைச் சுற்றி ஓரளவு திரவநிலையில் அந்தத் தனிமங்களிலிருக்கும். அக்கோள்களின் மையம் கற்பாறைகளாலானதாக இருக்கக்கூடும். அவற்றைத் தூசுகள், பாறைகள், பனிக்கட்டி ஆகியவற்றாலான வளையங்கள் சுற்றி வருகின்றன. சனிக் கோளைச் சுற்றியுள்ள இத்தகைய வளையத்தின் படங்களை அனைவரும் கண்டிருக்கிறோம்.
வால் விண்மீன்கள் என்பவை கல்லும் மண்ணும் புழுதியும் கலந்த பனிக்கட்டிகள்தான். அவை சூரியனுக்கு நெருக்கமாக வரும்போது அப்பொருட்கள் ஆவியாகிச் சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் வெளிப்படும். சூரியனிலிருந்து வீசும் சூரியக்காற்று அந்த ஆவியை ஊதித்தள்ளி நீண்ட வாலாக அமைக்கிறது. 200 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சூரியனை வட்டமிடும் சிறு சுற்று நேர வால் விண்மீன்கள் குய்ப்பர் பட்டை என்னும் பகுதியிலிருந்து வருகின்றன. குய்ப்பர் பட்டை ஏராளமான பாறைகளும் தூசுகளும் அடங்கிய ஒரு தட்டு வடிவத் திரள். 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சுற்று நேரமுள்ள வால் விண்மீன்கள் கோள வடிவாயமைந்த ஊர்ட் மேகத்திலிருந்து வருவதாக ஊகிக்கப்படுகிறது.
நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பகுதி
நெப்டியூனின் ஓடுபாதைக்கு அப்பால் கல்லும் மண்ணும் பனிக்கட்டிகளும் கொண்ட ஒரு வளையம் சூரியனைச் சுற்றி வருகிறது. அதற்குக் குய்ப்பர் பட்டை என்று பெயர். பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவைப் போலச் சுமார் 30 முதல் 55 மடங்கு வரையிலான தொலைவில் அது பரவியுள்ளது. அதிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை இனம் காணப்பட்டிருக்கின்றன. குய்ப்பர் பட்டையில் நூறு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட அகல நீளமுள்ள உறைந்த பொருட்கள் பல நூறாயிரக்கணக்கில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். அங்கிருந்துதான் வால் விண்மீன்கள் உருவாகி பூமியின் வளி மண்டலத்தினூடாகப் பாய்ந்து ஒளிர்கின்றன.
குய்ப்பர் பட்டையில்தான் புளுட்டோ உள்ளது. அது குட்டிக்கோளாக தற்போது ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் மேக்கமேக், ஹவுமியா, எரிஸ், குவவார், ஸெட்னா என்று பெயரிடப்பட்ட நான்கு குய்ப்பர் பட்டை உறுப்பினர்களுக்கும் குட்டிக்கோள் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. 2015 ஜூலை மாதம் அமெரிக்கா ஏவிய நியூஹொரைசான் என்ற விண்கலம் புளூட்டோவின் மேலாகப் பறந்து சென்றது. அது குய்ப்பர் பட்டையை ஆய்வு செய்யப் போகிறது.
ஒன்பதாவது கோள்
நெப்ட்யூனின் ஓடு பாதை சூரியனுக்கு நெருக்கமாக வரும்போதே 2.7 பில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைகிறது. அதைப் போல 20 மடங்கு அதிகமான தொலைவில் ஒரு கோள் சூரியனைச் சுற்றி வருகிறது. அதற்குத் தாற்காலிகமாக ஒன்பதாவது கோள் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பூமி சூரியனிலிருந்து உள்ள சராசரித் தொலைவைப் போல 600 மடங்கு அதிகமான தொலைவில், ஒன்பதாவது கோளின் ஓடு பாதை அமைந்துள்ளது. அதை இதுவரை தொலைநோக்கிகளின் மூலம் கூடப் பார்க்க முடியவில்லை. குய்ப்பர் பட்டையிலுள்ள பொருள்களின் மீது அது செலுத்தும் நிறையீர்ப்பு விசை விளைவுகளின் அடிப்படையில் ஒன்பதாவது கோளின் இருப்பை ஊகிக்கிறார்கள்.
குய்ப்பர் பட்டையைத் தாண்டி ஊர்ட் மேகம் அமைந்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவைப் போல 5,000 முதல் ஒரு லட்சம் மடங்கு வரையான தொலைவுக்கு அது விரிந்துள்ளது என மதிப்பிடுகிறார்கள். அதில் இரண்டு டிரில்லியன் வான் பொருட்கள் இருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள். சூரிய மண்டலத்தின் விளிம்பு ஊர்ட் மேகத்தைத் தாண்டி அமைகிறது. சூரியனிலிருந்து வெளிப்படும் மின்துகள்கள் பரவியிருக்கும் கண்ணீர்த்துளி வடிவ விண்வெளிப் பகுதியே ஹீலியோஸ்பியர் (சூரியக் கோளம்) எனப்படுகிறது. சூரியனிலிருந்து 15 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் சூரியக் கோளத்தின் எல்லை அமைந்துள்ளது. அதற்கு ஹீலியோ பாஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago