* மக்கள்தொகையைப் பொறுத்தவரை இந்தியாவின் ஆகப் பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். 2011 கணக்கின்படி 20 கோடி பேர். இந்தியர்களில் ஆறில் ஒருவர் உத்தரப் பிரதேசத்துக்காரர். உத்தரப் பிரதேசத்தை ஒரு தனிநாடாக மாற்றினால், அது உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கும்.
* இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களில் 80 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான 272 இடங்களோடு ஒப்பிட்டால், இது கிட்டத்தட்ட 30%. மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 30.
* இந்திய மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலேயே பெரிதான உத்தரப் பிரதேச சட்டசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 404. இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் என்று நிர்ணயிப்பதிலும் உத்தரப் பிரதேசம் முக்கியமான பங்கு வகிக்கிறது. வேறு எந்த மாநிலத்தைவிடவும் அதிகமான மதிப்பைக் கொண்டது உத்தரப் பிரதேச சட்டசபை உறுப்பினரின் ஓட்டு மதிப்பு 208. இதே சிக்கிமாக இருந்தால் வெறும் 7. அதாவது ஒரு உத்தரப் பிரதேச சட்டசபை உறுப்பினரின் ஓட்டு, ஒட்டுமொத்த சிக்கிம் சட்டசபை உறுப்பினர்களின் ஓட்டையும் தோற்கடித்துவிடும்.
* உத்தரப் பிரதேசம் நினைப்பதையே இந்தியா பிரதிபலிக்கும் என்ற அரசியல் சொலவடை இங்கு உண்டு. இந்தியாவின் 14 பிரதமர்களில் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய் என்று ஏழு பேர் உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் கைகளிலேயே சுதந்திர இந்தியாவின் பெரும்பான்மை ஆட்சிக் காலம் இருந்திருக்கிறது. மோடி குஜராத்தில் பிறந்தவர் என்றாலும்கூட உத்தரப் பிரதேசக்காரர்களால் வரித்துக்கொள்ளப்பட்டவர். இன்றைக்கும் உத்தரப் பிரதேசத்தின் உறுப்பினராகவே அவர் மக்களவையில் நீடிக்கிறார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago