மரங்களுடன் சேர்த்தழிக்கப்படும் வண்டினங்கள்

By ஜூரி

ரோப்பிய நாடுகளில் வண்டினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிவைச் சந்தித்துவருகிறது. வனங்களில் வயது முதிர்ந்த மரங்கள் உளுத்துப்போயும் அழுகியும் இறப்பை அடையும்போது மர வண்டுகள் அதன் உடல் பகுதியில் உள்ள மாவையும் இதர சத்துகளையும் உண்டு இனப்பெருக்கம் செய்யும். மரத்தில் உள்ள உயிர்ச் சத்துகளைக் கிரகித்து இதர தாவரங்களுக்கும் சிறு பூச்சிகளுக்கும் ஊட்டச்சத்துகளாக மாற்றி வழங்கும். அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படவும் உதவும். வண்டு இனங்களில் சுமார் 3,000 இருக்கின்றன. ஐந்தில் ஒரு பகுதி என்றால், 600 வண்டினங்கள் அழிவைச் சந்திக்கின்றன என்று பொருள்.

இப்போது வனங்களில் முதிய மரங்கள் அழுகியோ, உளுத்தோ விழுந்தால் அதை உடனே அகற்றி வேறு பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். நகரமயமாதல் அதிகரித்து வருவதால் முதிய மரங்கள் வெட்டப்படுவதுடன் வண்டுகளுக்கு உண்ணக் கிடைக்காமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன. சுற்றுலாத் தொழில் வேகமாக வளர்ச்சி அடைவதால் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும், வனங்களிலும் மலைப் பிரதேசங்களிலும் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. வண்டுகளுக்கு இரையாகக்கூடிய மரங்களின் அழிவு, வண்டினத்தையே அழிக்கத் தொடங்கிவிட்டது. மத்திய தரைக்கடல் பகுதியில் வனங்களிலும் மலைகளிலும் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் மரங்களில் உள்ள வண்டுகள் உள்ளிட்ட சிறு பூச்சி இனங்களும் பூண்டோடு கருகி இறக்கின்றன.

வண்டினங்கள் மரங்களை உண்பதுடன் சிறுசிறு விஷப்பூச்சிகளையும் தாவரங்களையும் உண்டு வாழ்வன. இயற்கைச் சூழலில் வண்டுகள் முக்கியமான தொடர்புக் கண்ணி. அவை அழிவதால் அவற்றால் அழிக்கப்படும் பூச்சிகள் பெருகும். வண்டுகளால் அயல்மகரந்த சேர்க்கை மூலம் வளரும் தாவரங்களும் மடியும். வண்டுகளை உணவாகக் கொள்ளும் வேறு உயிரினங்களும் உணவுக் குறைவால் மடியும். இவ்வாறு வன உணவுச் சக்கரத்தில் பெரிய தொடர்பு அறுபட்டுவருகிறது. இது உயிர்ச்சூழலுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இயற்கையைப் பாதுகாக்கும் சர்வதேச ஒன்றியம் (ஐயுசிஎன்) என்ற அமைப்பு இதனால் கவலை அடைந்திருக்கிறது. உயிர்ச் சூழல் காப்பாளர்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. உலகம் முழுக்க அழிவை எதிர்நோக்கியுள்ள தாவரங்கள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் பட்டியலை இந்த ஒன்றியம்தான் தயாரித்து வைத்திருக்கிறது.

இனி வயது முதிர்ந்த மரங்கள் உளுத்துப்போய் விழுந்தாலும் அழுகினாலும் அதை அப்புறப்படுத்தாமல் வண்டுகளும் சிறிய பூச்சிகளும் அதை உண்ண அனுமதிக்க வேண்டும், மரத்தை அகற்றுவதோ எரிப்பதோ கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இப்போது வனங்களையே கூட வணிகப் பயன் உள்ள, அல்லது அலங்காரத் தோற்றமுள்ள மரங்களை நட்டு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

முன்பு வனங்களில் இயற்கையாக இருந்த புதர்களும் செடி கொடிகளும் அகற்றப்பட்டு வலிந்து புல்தரைகள் வளர்க்கப்படுகின்றன. இதுவும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்துதான் என்பதை சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மிகவும் முன்னேறிய, விவரம் தெரிந்த ஐரோப்பாவிலேயே இப்படி என்றால் இந்தியா போன்ற நாடுகளில் வனங்களின் பராமரிப்பு குறித்த அக்கறையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்